8 Jan 2018

ஒப்பீட்டளவில் களுவாஞ்சிகுடிப் பிரதேசம் அபிவிருதியில் மிகவும் அடிமட்டத்தில் காணப்படுகின்றது – கண்ணன்

SHARE
ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் எமது களுவாஞ்சிகுடிப் பிரதேசம் அபிவிருத்தியில் மிகவும் அடிமட்டத்தில் காணப்படுகின்றது. இந்நிலையில் சமஸ்ட்டி, தமிழ் தேசியம், சுயநிருணய உரிமை,  போன்றவற்றைத் தெரிவிக்கின்றவர்கள் அடிப்படையில் அந்த சொற்களுக்கு அர்த்தம் கூடக் கற்பிக்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.
அவ்வாறானவர்கள் வந்து சொன்னால் மக்கள் வாக்களித்துவிடுவார்கள்,  அப்போது அவர்கள் தீர்மானிக்கும் வேட்பாளர்கள் வெற்றிபெற்று விடுவார்கள் என்ற தங்களது அரசியல் சாதுரியத்தை மக்களுடன் ஒன்றித்து சொல்லிச், சொல்லி செயற்பட்ட அரசியல் காய் நகர்த்தல்களெல்லம்  படிப்படியாக தற்போது தகர்ந்து போய்க் கொண்டிருக்கின்றது.

என களுவாஞ்சிகுடி வட்டாரத்தில் ஐக்கிய தேசிக் கட்சியில் போட்டியிடும் வடிவேல் கண்ணன் தெரிவித்தார். சனிக்கிழமை (06) இரவு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள வேட்பாளர் மு.வாமதேவனின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் இதன்போது குறிப்பிடுகையில்….

இனவாதங்களை ஏற்படுத்துவதும், இனங்களுக்கிiயில் பிளவுகளை ஏற்படுத்துவதும் தமிழ் தேசியம் பேசுபவர்களின் கைவந்த கலையாகிவிட்டது.  இவ்வாறானவர்கள் அரசியலில் வெற்றி பெற்று விட்டால் பின்வழியால் என்னவெல்லாம் பெற்றுக் கொள்கின்றார்கள் என்பதையெல்லாம் சிந்திப்பது கிடையாது. வடமாகாணத்தில் இம்முறைகூட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் விஜயகல மகேஸ்வரன், ஆகியோரை அந்த மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். அதுபோல் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என வடபுலத்து மக்கள் திட்டமிட்டு விட்டார்கள். எனவே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசியல் வாதிகளின் பின்புலத்தைப் பார்த்தால் எமது தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

எந்த அரசியல்வாதியும் திட்ட முன்மொழிவுகளைக் கொடுத்து தொழிற்போட்டைகளை அமைத்து குறைந்த பட்சம் 500 பேருக்காவது வேலைவாயப்புக்களை வழங்கியிருக்கின்றோம் என்பதைச் சொல்வார்களா? அல்லது காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஏதாவது ஆக்க பூர்வமாக செய்பாடுகளை அவர்கள் முன்னெடுத்துள்ளார்களா என்பதைச் சொல்வார்களா? புணர்வாழ்வழிக்கப்பட்ட முன்னாள் போராழிகளின் வாழ்வாதாரம் தொடர்பில் ஏதாவது நடவடிக்கைகைகள் எடுத்துள்ளார்கள் என்பதைச் சொல்வார்களா? இத்தனைக்கெல்லம் ஒரு துப்பில்லாத அரசியல்வாதிகள், தேர்தல் ஒன்று வந்துவிட்டால் இனரீதியான கருத்துக்களைத் தெரிவித்து வரும் கருத்துக்களைத் தவிர்க்க வேண்டும்.    

எனவே தமிழ் தேசியம் போசுகின்றவர்களுக்கு எமது மக்கள், தக்க பதிலடி கொடுத்து மக்கள் இப்பிரதேசத்தில் நல்லதொரு தலைவரைத் தெரிவு செய்ய வேண்டிய எண்ணத்துடன் இருந்து கொண்டிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில்தான் எமக்கும் ஐக்கிய தேசியக் கட்சியில் களமிறங்குவதற்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதற்காக வேண்டி ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான சோ.கணேசமூர்த்தியுடன் நாம் கரம்கோர்த்துள்ளோம். இந்தப் பயனம் எமக்கு நிற்சயம் வெற்றிபெறும். களுவாஞ்சிகுடிப் பிரதேசம் நூற்றுக்கு நூறு வீதம் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெறும் இதனூடாக இந்த களுவாஞ்சிகுடி வட்டாரமும் இதில் அதிக பங்களிப்பை வழங்கவுள்ளது. 

இந்நிலையில் பட்டிருப்புத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது என்ற செய்தியை கெழும்புக்கு அனுப்பி இப்பிரதேசத்தின் அபிவிருத்தியில் நாம் பெரும் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: