12 Jan 2018

பருவ மழை குறைவடைந்துள்ளதானால் உழவு இயந்திரம் மூலம் விவசாயிகள் நீர் இறைத்து வருகின்றனர்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டடத்தில் பருவ மழை குறைவடைந்துள்ளதனால் பெரும்போக வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பலத்த இன்னல்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றர்.
பருவமழை இல்லாததனால் விவசாயிகள் அதிக பிரயத்தனத்தின் மத்தியில்  அதிக செலவு செய்து நீர் பம்பிகள் மூலமும், உழவு இயந்திரங்கள் மூலமும் வாயல்களுக்கு நீரைஇறைத்து வருகின்றனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பிரதேசம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பெரும்போக வேளாண்மைச் செய்யை மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் மேட்டு நிலங்களிலும் நிலக்கடலை, சோளன், பயற்றை என உப உணவுப் பயிரினங்களும் செய்கை பண்ணப்பட்டுள்ளன. 

தற்போது வடகீழ் பெருவப் பெயர்ச்சிக் காலமாக இருந்தாலும் நெல் விதைத்த காலத்தில் மழை வீழ்ச்சி கிடைத்துள்ள போதிலும், தற்போது பெரும்பாலான நெல்வயர்கள் குடலைப் பருவத்தில் காணப்படுகின்றன. வேளாண்மைக்கு இப்பருத்தில் நீரில்லாமல் கருகிப்போகும் நிலைமைக்கத் தள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் சிறய குளங்களிலும், வாய்க்கால்களிலும் தேங்கிக் காணப்படும் நீரை விவசாயிகள் உழவு இயந்திரங்கள் மூலலும், நீர் பம்பிகள் மூலமும், வயல்களுக்குப் பாய்ச்சி வருகின்றார்கள். இந்நிலையில் வியாழக்கிழமை காலை மாவட்டத்தின் பல இடங்களில் சிறியளவில் மழை பெய்துள்ளமை விவசாயிகளுக்கு ஓரளவு திருப்பதியளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.







SHARE

Author: verified_user

0 Comments: