கடந்த வியாழக்கிழமை (01.012018) மாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாசாரக் காரியாலயம் ஒன்று மட்டக்களப்பு திருப்பாழுகாமத்தில் வேட்பாளர் கந்தசாமியின் வீட்டில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராசசிங்கம் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதிதி தவிசாளர் இ.பிரசன்னா, முன்னாள் உறுப்பினர் கோ.கருணாகரம், மற்றும் வேட்பாளர்களான இ.கந்தசாமி, வி.ஆர்.மகேந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர். இதன்போது திருப்பழுகாமம் வட்டாரத்தைச் சேர்ந்த பல பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் அதே திருப்பழுகாமம் வட்டாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் த.கணபதிப்பிள்ளை, அவ்விடத்திற்கு வந்துள்ளார். பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அப்பிரசாரக் கூட்டத்திலும் கலந்து கொண்டு சென்றுள்ளார்.
மிகநீண்டகாலமாகவிருந்து தமிழ் தேசியத்தின் பால் ஈர்ப்பட்டுள்ள திருப்பழுகாமம் கிராமத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, சுயேட்சைக்குழு உள்ளிட்ட பலர் இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்கள் அனைவரும் தத்தமது தேர்தல் பிரசாசாரங்கை துரிதமாக முன்நெடுத்துள்ள இந்நிலையில் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழ் அணிதிரள வேண்டும். இதற்கு கட்டியங் கூறுவதுபோல் எமது கிராமத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் த.கணபதிப்பிள்ளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இப்பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு சென்றுள்ளார் என இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் தங்களுக்குள் அவ்விடத்தில் கதைத்துக் கொண்டமையும் இதன்போது அவதானிக்க முடிந்தது.
தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள இந்நிலையில் கட்சித்த தாவல்கள் இடம்பெறலாமா என்பதையும் பலரும் அவதானித்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment