30 Jan 2018

முழு நேர ஊடகவியலாளர்கள் முகம்கொடுக்கும் தொழில் ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து விவரம் திரட்டும் நடவடிக்கை

SHARE
முழு நேர ஊடகவியலாளர்கள் முகம்கொடுக்கும் தொழில் ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து விவரங்களைப் பெறும் நடவடிக்கையில் ஊடக அமைச்சு ஈடுபட்டுள்ளது.
ஊடக அமைச்சின் பணிப்புரைக்கமைய  அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்த விவரம் திரட்டும் சந்திப்பு திங்கட்கிழமை (29.01.2018) மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் அழைப்பின் பேரில் இடம்பெற்றது.
மாவட்ட தகவல் அதிகாரி வடிவேல் ஜீவானந்தத்தின் பிரசன்னத்துடன் இடம்பெற்ற இந்த விவரம் திரட்டும் சந்திப்பில் மட்டக்களப்பில் பணியாற்றும் முழு நேர ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பல்வேறு செய்தி நிறுவனங்களுக்காகப் பணியாற்றும் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் முழு நேர ஊடகவியலாளர்களிடமிருந்து அவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் பற்றிய விவரம் விரிவாக தெரியப்படுத்தப்பட்டது.



SHARE

Author: verified_user

0 Comments: