16 Jan 2018

பாடசாலைகளுக்கு திண்மக் கழிவகற்கும் உபகரணங்கள் வழங்கி வைப்பு - டெங்கை முழுமையாக சுகாதாரத் துறையினால் மாத்திரம் கட்டுப்படுத்தமுடியாது

SHARE
டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பாடசாலைக்ளுக்கு திண்மக் கழிவகற்றும் உபகரணங்கள் திங்கட் கிழமை (15) வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் இவ்வுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 24 பாடசாலைக்கு தலா சுமார் 75000 ரூபா பெறுமதியான திண்மக் கழிவகற்றும் பொருட்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய தொற்று நோயியலாளர் காந்தரூபன் தர்சினி, களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி கே.கிருஷ்ணகுமார், செங்கலடி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி இ.சிறிநாத், மண்முனை வடக்கு சுகாதார வைத்தி அதிகாரி எஸ்.கிரிசுதன், செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு உறுப்பினர் எம்.யுபராஜ், கிளை நிறைவேற்று உத்தியோகஸ்தர் வி.பிறேமகுமார், மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், செஞ்சிலுவை சங்க தொண்டர்கள், அங்கத்தவர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு பிராந்திய தொற்று நோயியலாளர் காந்தரூபன் தர்சினி….. 

டெங்கை முழுமையாக சுகாதாரத் துறையினால் கட்டுப்படுத்த முடியாது, பாடசாலைகள், தனியார் அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், தன்னார்வ தொண்டர் அமைப்புக்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரினதும் ஒத்துழைப்புடனும்தான் இதனைக் கட்டுப்படுத்த முடியும். பொது இடங்களிலும் ஏனைய இடங்களிலும் கழிவுகளை மக்கள் பொறுப்பில்லாமல் போட்டுவிட்டுச் செல்லும் நிலமை இல்லாமல் செய்ய வேண்டும் என்றால் அது மக்களின் மனங்களில் மாற்றம் வரவேண்டும். இதற்காக வேண்டித்தான் பொதுமக்கள், பொது அமைப்புக்கள் உள்ளிட்ட அனைவரினதும் உதவிகள் தேவை. இல்லாதவிடுத்து தனியாக சுகாதாரத் துறையினால் மாத்திரம் டெங்குவைக் கட்டுப்படுத்த முடியாது.

எமது சுகாதாரத்துறையினால் தொடர்ந்து அடங்குக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். பாடசாலைகளில்தான் பிள்ளைகளின் மனமாற்றம் வருகின்றது. எனவே பாடசாலை மட்டத்தில் விழிப்புணர்வுகளை முன்னெடுத்தால் எதிர்காலத்தில் டெங்குவைக் பட்டுப்படுத்தலாம். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 560000 இற்கு மேற்பட்ட  மக்களிடத்திலும் எமது அதிகாரிகள் தனித்தனியாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முடியாது. எனவே மக்களாக உணர்ந்து செயற்படுவதற்கு விழிப்புணர்வுகளைக் கொண்டு வரவேண்டும் என அவர் தெரிவித்தார்.




















SHARE

Author: verified_user

0 Comments: