கடந்த காலத்திலிருந்து இலங்கையில் 53 வீதம் வாக்காளர்களாக பெண்கள் இருந்து வந்துள்ள போதிலும் அதில் பெண்களை வேட்பாளர்களாகக் களமிறக்குவதற்கு தமிழ் கட்சிகள் இடம் கொடுத்திருக்கவில்லை, இதனால் வீடிலே இருந்த எங்களை உதறித் தள்ளிவிட்டு அவர்கள் ஆசனங்களில் அமர்ந்துவிட்டார்கள்.
என களுவாஞ்சிகுடி வட்டாரத்தில் ஐக்கிய தேசிக் கட்சியில் போட்டியிடும் விஜயலெட்சுமி இராமச்சந்திரன் தெரிவித்தார். சனிக்கிழமை (06) இரவு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள வேட்பாளர் மு.வாமதேவனின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் இதன்போது குறிப்பிடுகையில்….
இதன்காரணமாக மனமுடைந்து நான் ஐக்கிய தேசியக் கட்சியில் இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றேன். எமது வட்டர மக்கள் யானைச் சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் எமது பெண்களுக்கான அபிவிருத்தி, மற்றும் சுகாதார வசதிகள், உள்ளிட்ட பல நிறைவான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
எனவே எமது மக்களின் அடிமனதில் அடிஊன்றி இருக்கின்ற தமிழ் உணர்வு என்ற போலித்தனமான வார்த்தைகளைக் கண்டு ஏமாறாது, அற்ப ஆசைகளைக்காக விட்டுக் கொடுக்காமல், அறிவு பூர்வமாகச் சிந்தித்து, கிராமத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு யானைச் சின்னத்திற்கு எமது மக்கள் வாக்களிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment