16 Jan 2018

ஏறாவூர் நகர பிரதேசத்தில் முழுமையான டெங்கு ஒழிப்பு நடவடிக்கை சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி

SHARE
ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலடங்கும் ஏறாவூர் நகர பிரதேசத்தில் முழுமையான டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருப்பதாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராசசிங்கம் திங்களன்று 15.01.2018 தெரிவித்தார்.குறிப்பாக மிச்நகர் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட மிச்நகர், மீராகேணி ஆகிய கிராமங்களில் டெங்கு உற்பத்தியாகக் கூடிய இடங்களைத் துப்புரவு செய்யும் விஷே‪ட நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கபப்ட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலகம், ஏறாவூர் நகரசபை, செங்கலடி பிரதேச சபை, ஏறாவூர் பொலிஸ் நிலையம், ஏறாவூர் பள்ளிவாயல்கள், விளையாட்டுக் கழகங்கள் கிராம மட்ட அமைப்புக்கள், நலன்விரும்பிகள் ஆகியோர் டெங்கு உற்பத்தியாகிப் பரவக் கூடிய இடங்களைத் துப்புரவு செய்வதில் ஒத்துழைப்பு வழங்கிவருவதாகத் தெரிவித்த அவர் இந்த விடயத்தில் பொதுமக்கள் அர்ப்பணிப்புடனும் அக்கறையுடனும் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஏறாவூர் நகர பிரதேசம் மற்றும் நகரை அண்டிய ஏறாவூர் பற்று நிருவாகத்திற்கு உட்பட்ட மிச்நகர், மீராகேணி, சத்தாம்ஹ{ஸைன், ஐயன்கேணி ஆகிய பகுதிகளிலிருந்து டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார் 35 இற்கு மேற்பட்டோர் கடந்த இரு வார காலத்தில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: