(எம்.எஸ்.எம்.சறூக்)
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் பிராந்திய முகாமையாளர் டி.ஏ.பிரகாஷ் தலைமையில் 2018 ஆம் ஆண்டின் கடமைகளை தொடங்கும் முதல் நாளாகிய செவ்வாய்க்கிழமை (02) தங்களது கடமைகளை சத்தியபிரமாணம் செய்து உறுதிமொழி ஏற்றனர்.
2018 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்களின் இலக்கு மற்றும் அவற்றை அடைவதற்கான உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையின் அவசியம் தொடர்பாக, இதன்போது பிராந்திய முகாமையாளர் டி.ஏ.பிரகாஷ் உத்தியோகஸ்த்தர்களுக்கு விளக்கமளித்தார்.
0 Comments:
Post a Comment