3 Jan 2018

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பல்லின பாரம்பரியங்களைப் பிரதிபலிக்கும் உணவுச்சாலை திறந்து வைப்பு

SHARE
இலங்கை கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் பல்லின பாரம்பரியங்களைப் பிரதிபலிக்கும் உணவுச்சாலையொன்று புதன்கிழமை 03.01.2018 திறந்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி சி. ஜெய்சங்கர் தெரிவித்தார்.
“உணவு உற்பத்தி ஆண்டாக 2018” என்ற ஜனாதிபதியின் பிரகடனத்திற்கிணங்க நிலைபேறான விவசாய அவிபிருத்தி இலக்கினை அடைந்து கொள்வதன் ஒரு பகுதியாக இந்த பாரம்பரிய உணவுச்சாலை “அமுது” சமூக நிறுவக அட்டில்சாலை எனும் பெயரில் இயங்கத் தொடங்கியுள்ளது.

இங்கு வழமைபோல் அல்லாது பல்லின சமூகத்தவரின் பாரம்பரிய உள்ளுர் உணவு வகைகளைத் தயாரித்து  வழங்கும் நோக்கில் சமூகங்களை இணைத்து அவர்களின் உற்பத்திகளுக்கான இடத்தினை பெற்றுக்கொடுக்கும் களமாக இச்செயற்பாடு அமைந்துள்ளதாகவும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளைத் தாண்டி பல்லின சமூகத்தில் காணப்படுகின்ற சுய உற்பத்தியாளர்களை ஊக்கிவித்து அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்குத் தோதாகவும் இது அமைகிறது என அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ன ஏற்படுத்தாத அதேவேளை ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்வதும் எமது சமூகத்தை பாதுகாப்பான எதிர்காலத்திற்கு இட்டுச்செல்வதும் எமது நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில் இலங்கை கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பதில் பதிவாளர் ரீ. விஜயகுமார், உதவிப் பதிவாளர் இரேஷா படுகெதர, சிரேஷ்ட நிதி உதவியாளர் எல்.கே.டி. லக்மாலி, நடன நாடக அரங்கியல் துறைத் தலைவி ஷர்மிளா ரஞ்சித்குமார், இசைத் துறைத் தலைவி ஜெயந்தினி விக்னராஜன் உட்பட இன்னும் பல கல்வியாளர்களும், அதிகாரிகளும் மாணவர்களும் கலந்து கொண்டனர். 







SHARE

Author: verified_user

0 Comments: