மட்டக்களப்பில்முனைப்பினால்மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கரநாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு புதன் கிழமை (17) மாவடிவேம்பில் அமைந்துள்ள ஏறாவூர் பற்று ஏர்முனை மாற்றுத்திறனாளிகளின் அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் கே.கங்காதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முனைப்பின் சிறிலங்கா நிறுவனத ;தலைவர் மா.சசிகுமார், மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஆலோசகர் எஸ்.அரியதாஸ், முனைப்பின் சுவிஸ் அமைப்பின் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கிழக்கு மகாகணத்தில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஏர்முனை மாற்றுத்திறனாளிகளின் அமைப்பினர் முனைப்பு நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து முதற்கட்டமாக ஒரு தொகுதியினருக்கு நாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் கலந்துகொண்ட முனைப்பின் சிறிலங்காத் தலைவர் மா.சசிகுமார் கருத்துரைக்கும் போது…..
நமது மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு தேவைகள் எம்மால் இனம் காணப்பட்டுள்ளது. அந்த வகையில் தேவைகளைக்க ண்டறிந்து எம்மிடமுள்ள நிதிவளத்துக்கு ஏற்ப வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்கு;கைத்தரத்தினை மேம்படுத்தி வருகின்றோம். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு செயற்திட்டங்களை செயற்படுத்தி தற்போது நாளாந்த வருமானம் பெறுகின்ற பல குடும்பங்களை உருவாக்கியுள்ளோம்.
நமது திட்டங்களுக்கு உதவி புரிகின்றவர்கள் சுவிஸ் நாட்டில் வாழும் நமது உறவுகள் அவர்கள் எவ்வாறு கஸ்பட்டு சம்பாதிக்கின்றனர் என்பது அவர்களுடன் உரையாடும்போது நமக்குப்புலனாகின்றது. அவ்வாறு பெறப்படுகின்ற உதவியினையும் நம்மவர்கள் துஸ்பிரயோகம் செய்கின்றனர். இன்று மட்டக்களப்பில் மலசலகூடத்திற்குள் விறகினை அடுக்கி வைக்கின்ற நிலை காணப்படுகின்றது. இந்நிலை மாறவேண்டும்.தற்போது எம்மால் வழங்கப்பட்டுள்ள இவ்உதவிகளை தயவு செய்து பிரயோசனப்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.
0 Comments:
Post a Comment