மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டிப்பளை சந்தியில், பேரூந்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூவர் காயமடைந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.
பட்டிப்பளையில் இருந்து சென்ற பேரூந்துடன், கொக்கட்டிச்சோலைப் பகுதியில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தி சாரதி மற்றும் பெண்ணொருவரும், குழந்தையொன்றும் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பிலான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment