கடந்த காலங்களில் நடைபெற்ற பலதேர்தல்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற செய்தியினை உரத்து கூறியுள்ளீர்கள். இத்தேர்தலிலூம் அச் செய்தியை எடுத்துக் கூற தமிழ் மக்கள் தயாராக வேண்டும் என மட்டக்களப்பு மாவட்டம் எருவில் வட்டாரம் சார்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் சி.காண்டீபன் தெரிவித்தார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக திங்கட் கிழமை (01) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்….
உண்மையில் எமது எருவில் கிராமமானது மிகவும் பின்தங்கியதொரு கிராமமாக காணப்டுகின்றது. உள்ளுராட்சி மன்றத்தேர்தல் ஊடாக எமது கிராமத்தினை நாமே அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும் இதனால் எமது கிராமத்தினை எதிர்காலத்தில் மிகவும் சிறப்பான வளர்;ச்சி பாததைக்கு செல்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.
என்னை பொறுத்தளவில் பந்நெடுங்காலமாக கிராமத்தின் அபிவிருத்திக்காக நான் சங்கங்கள், கழகங்கள் ஊடாக செற்பட்டு வந்துள்ளேன். கிராமத்தில் எங்கு என்னனென்ன தேவை இருக்கின்றது என்பது பற்றி எனக்கு கண்கூடாகவுள்ளது. ஆகவே இதனை நான் செவ்வண்னே மேற்கொள்வதற்கு; எனக்கு இத்தேர்தலூடாக மக்கள் அங்கிகாரம் வழங்குவார்கள். எருவில் கிராமம் என்பது பந்நெடுங்காலமாக தமிழ்த் தேசியத்தின்பால் ஒருமித்து நிற்கின்ற கிராமமாகும். எமது கிராம மக்கள் இந்த விடயத்தில் சரியான தீர்மானத்தினை எடுக்ககூடிய பக்குவம் அவர்களுக்குண்டு. அவர்கள் யார் கிராமத்தின்பால் பற்றுக்கொண்டு செயற்படுவார்கள் என்பதனை நன்கு அறிந்து வைத்திருக்கின்றார் அதனை இத்தேர்தலின் ஊடாக வெளிக்காட்டுவார்கள்.
தற்போதைய காலகட்டத்தில் நாங்கள் எதிர்கொள்ளவிருக்கும் இத்தேர்தலானது அனைவரும் அனைத்து கட்சிகளும் கூறுவது போன்று வெறும் அபிவிருத்தியை மட்டும் மையமாக கொண்ட தேர்தல்தான் என்பதனை, நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மாறாக தமிழ்த் தேசியத்துடன் கூடிய அபிவிருத்தியை வென்றெடுப்பதற்கான தேர்தலாகத்தான் இத்தேர்தலினை தமிழ் மக்களாகிய நாங்கள் நோக்க வேண்டும்.
இத் தேர்தலினூடாக நாங்கள் எமது உரியையுடன் கூடிய அபிவிருத்தியை வென்றெடுக்க வேண்டும். எமது மக்கள் பேரினவாத கட்சிகளின் அபிவிருத்தி என்ற மாயைக்குள் மாட்டிக்கொள்ளக்கூடாது, என்பதற்காகவே நான் இதனை கூறுகின்றேன்.
தற்போதைய அரசியல் நீரோட்டத்திலே இத்தேர்தல் சிறிதாக இருந்தாலும் தேர்தலின் முடிவுகள் பெரிதாக இருக்கும். அனைத்து விடயங்களையும் சர்வதேச சமூகம் பாரத்துக்கொண்டு இருக்கின்றது. இத்தேர்தல் முடிவானது இந்த காலகட்டத்தில் தமிழ் மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை புறந்தள்ளி விட்டார்கள், பேரினவாதிகளின் கட்சியின்பால் நிற்கின்றனர் என்ற செய்தியினை; சர்வதேசத்தின் காதுகளுக்கு நாங்கள் எடுத்துச்செல்லகூடாது. அது எமது இனத்திற்கு நாங்கள் செய்யும் வரலாற்று தவறாக மாறிவிடும். காடந்த காலங்களில் நடைபெற்ற பலதேர்தல்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற செய்தியினை உரத்து கூறியுள்ளீர்கள் அதே போன்று இத்தேர்தலில் அச்செய்தியை மீண்டும் எடுத்துக் கூறதயாராக வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment