8 Jan 2018

கடலோரங்களை தூய்மைப்படுத்தும் புதிய திட்டம்

SHARE
கடலோரங்களை தூய்மைப்படுத்தும் புதிய திட்டம் ஒன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச  சபையினால்  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்  ஆரம்ப நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (07) களுவாஞ்சிகுடி கடற்கரை பிரதேசத்தில் பிரதேச சபையின் செயலாளர்  கே.லக்ஷ்மிகாந்தன்  தலைமையில் நடைபெற்றது.  

இந் நிகழ்வில் கடலோர பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட பிரதேச சபை ஊழியர்கள்  அனைவரும் கலந்து கொண்டனர். பிரதேச சபைக்குட்பட்ட சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூர கரையோராம் இதன்போது சுத்தப்படுத்தப்பட்டது.

பிறந்திருக்கும் புதிய ஆண்டு முழுவதும் நடைமுறை படுத்தக்கூடிய வகையில்; இந்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள, இத்திட்டத்தின் மூலம் மக்கள் சுத்தமான சூழலை  அனுபவிப்பதும் கடல்வளங்களை பாதுகாப்பதுமே இத்திட்டத்தின் நோக்கமாகும் என  செயலாளர் இதன்போது தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: