ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலகப் பிரிவின் வெள்ளைக்கல்மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 07.01.2018 காட்டு யானைத் தாக்குதலினால் விவசாயி ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வந்தாறுமூலை பிரதான வீதியை அண்டி வாழும் முத்துலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 51) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.
இவர் மாடுகளைப் பராமரித்துக் கொண்டு அப்பகுதிலுள்ள வாடியில் இருந்தபோது காடுகளுக்குள் இருந்து வந்த யானைகளில் ஒன்று தாக்கியதில் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.
பொழுது புலர்ந்த வேளையிலேயே இவர் கொல்லப்பட்ட விடயம் அயல் வாடிகளிலிருந்தவர்களுக்குத் தெரியவந்ததையடுத்து சடலம் மீட்கப்பட்டது.
சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக கரடியனாறு பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment