24 Dec 2017

கட்டுரை: நீர் மூலம் மற்றும் நீரேந்து பகுதிகளை பாதுகாப்பதில் உரிய பங்குதாரர்களின் (Stakeholders) வகிபாகம்

SHARE
மானிட வாழ்வியலோடு நெருக்கமான வரலாற்றினை கொண்டதே நீராகும். இன்றய நவீன உலகின் சந்தைப் பொருளாகவும் நீலத் தங்கமாகவும் நீரானது வர்ணிக்கப்படுவதோடு தேசிய அபிவிருத்திக்கு தேவையான ஆரம்ப உள்ளக வசதியாகவும் சுத்தமான குடிநீர் கருதப்படுகின்றது. இந்த அற்புத வளத்திற்கு ஏற்படுகின்ற ஆபத்தானது மனிதர்களை சமூக பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நிர்ப்பந்திக்கின்றது. 
இலங்கையின் பிரதான இயற்கை வளமாக நீர் காணப்படுவதுடன் தொன்று தொட்டு இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு சாதகமாகவும் காணப்படுகின்றது. இலங்கையில் 103 பிரதான நதிகள் உள்ளன. பூகோள ரீதியில் நோக்கும் போது நதிகளுக்குரிய நிலத்தின் அளவானது இலங்கையின் முழு நிலப்பகுதியில் சுமார் 90 வீதமாகும்.

இலங்கையில் பெரிய இயற்கை நிர்த்தேக்கங்கள் இல்லாவிடினும் பல்வேறு அளவுகளில் மனிதர்களால் அமைக்கப்பட்டுள்ள குளங்களையும் நீர்ப்பாசன முறைகளையும் அதிகளவில் கொண்டுள்ளது. தற்போது 14,000 குளங்கள் உலர் வலயப் பிரதேசத்தில் காணப்படுகின்றன. மேலும் தீவு முழுவதும் இதுவரை இனங்காணப்பட்டுள்ள நீரூற்றுக்களின் எண்ணிக்கை 3,540 பதிவாகியுள்ளது. 

நீர் மூலங்கள் என்பது நீர்த்தேக்கங்கள், நதிகள், நீரோடைகைள், நீரேந்து பிரதேசங்கள், நீரூற்றுக்கள், பனிமலைகள், வளிமண்டல நீராவி போன்றன நீர் மூலங்களுக்குள் அடங்கும். அத்துடன் நீரேந்து பகுதி என்பது இயற்கை நிலப்பரப்பு மூலம் நீர் சேகரிக்கப்படும் ஒரு பகுதியாகும்.

மேற் போன்ற நீர் மூலங்களிலிருந்தே இலங்கையில் குடிநீரானது பெறப்படுகின்றது. அந்த வகையில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிhலமைப்புச் சபையும் குறித்த பிரதேசத்தின் நீர் வளத்திற்கேற்ப மேலே உள்ளதை போன்ற நீர் மூலங்களிலிருந்தே நீரினை பெற்று அவைகளின் தரத்திற்கேற்ப (Water Quality)  சுத்திகரித்து விநியோகித்து வருகின்றது. இச்சுத்திகரிப்புக்காக ஆண்டு தோரும்   ரூ. 500.00 மில்லியனுக்கும் அதிகமான தொகை செலவிடப்படுகின்றது. 

தற்போதைய நிலையில் நீர் மூலங்கள் நீரேந்து பகுதிகளில் நீர் வளத்தினை மாசடையச் செய்யும் பல்வேறு செயற்பாடுகள் இடம்றெ;று வருகின்றன. அவைகளின் தாக்கத்தினால் இன்று குடிநீர் பெற்றுக் கொள்வதில் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன. இந்நிலை தொடரும் பட்சத்தில் எதிர்கால குடிநீர்; தேவையை பூர்த்தி செய்வதில் பல சவால்களை எதிர் கொள்ள வேண்டிவரும் என பல ஆய்வுகள் சுட்டிக் காட்டி நிற்கின்றன.

பின்வரும் காரணிகளால் நீர் வளமானது பல்வேரு விதமாக மாசடைந்து வருவதனை தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  

விவசாய செயற்பாட்டின் போது சிபாரிசு செய்யப்பட் அளவை மீறி பல்வகைப்பட்;ட இரசாயண உர வகைகள் மற்றும் பீடைநாசினிகளை பாவித்தல்.
பல வகைப்பட்ட தொழிற்சாலை கழிவுகள்இ வாகன பராமரிப்பு கழிவுகள், மிருக வளர்ப்பு மற்றும் மிருக பன்னைகளின் கழிவுகள் போன்றன நீர் மூலங்களை வந்தடைதல்.

உள்ளுராட்சி மன்றங்களினால் சேகரிக்கப்படுகின்ற குப்பைகள் மற்றும் கழிவுகள் திட்டமிடப்படாத வகையில் நீரேந்து பகுதிகளில் கொட்டப்படுதல்.

நீரேந்து பகுதிகளில் மண், சேறு, களிமண், மணல் போன்றவைகளை அகழ்தல்
சட்ட விரோத நன்னீர் மீன் பிடி.

நகரமயமாக்கல் மற்றும் திட்டமிடப்படாத அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு காடுகளை அழித்தல்.

முறையற்ற நிலப்பயன்பாடு, மண் அரிப்பு மற்றும் மண் சரிவு.

நீரேந்து பகுதிகளை அண்மித்த பிரதேசங்களில் வாழ்வோர் தமக்கான சுகாதார முறையிலான மலசலகூட வசதிகள் இல்லாமையினால் திறந்த வெளிகளை பயன்படுத்துதல்.

பூகோள வெப்பநிலை கூடிக்கொண்ட செல்லல் அதற்கு மேலதிகமாக பிற கால மாற்றங்களினதும் இயற்கை அனர்த்தங்களினதும் விளைவுகள்
மேற்கூறப்பட்ட காரணிகளால் நீர் மூலங்களானது பல்வேறு வகையில் அதாவது இரசாயனஇ பௌதிகஇ நுண்ணுயிரியல் மற்றும் கதிர்வீச்சுக்களால் பாதிக்கப்பட்டு வருவதோடு அழிவடைந்தும் வருகின்றன. இவ்வாறான தாக்கத்திற்கு உட்பட்ட நீரினை குடிநீராக மாற்ற சுத்திகரிக்கும் போது பல மில்லியன் ரூபாக்களை அதற்கான இரசாயனங்களை கொள்வனவு செய்ய செலவு செய்யவேண்டியுள்ளது. அதன் சுமையை மீண்டும் மக்களே தாங்கவேண்டியுள்ளது.

எமது நாட்டில் நீர் மூலங்களை பேணிப் பாதுகாப்பதுடன் தொடர்புடையதாகஇ சுதந்திரத்திற்கு முன்னரும் அதேபோன்று அதற்கு பின்னரும் ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் பல்வேறு கொள்கைகளையும் சட்டதிட்டங்களையும் அறிமுகம் செய்தன. அவை சுமார் 40 பல்வேறு சட்டதிட்டங்களில் நீர் மூலங்களைப் பேணுவதுடன் தொடர்புடைய விடயங்கள் உள்ளடங்கியிருந்தன. இருப்பினும் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுகளை பெறு;றுக் கொள்வதில் இவை போதுமானதாக காணப்படவில்லை. மேலும் இது தொடர்பில் பிரதானமாக நீர் மூலங்கள் சார்ந்த பிரதேசங்களினதும் நீர்வழி ஒதுக்கங்களினதும், குளங்களினதும் நீரேந்து பிரதேசங்களின் எல்லைகளை இனங்கண்டு அவை நிலத்தில் அடையாளப்படாமலிருத்தல், நீர் மூலங்களைப் பேணிப் பாதுகாப்பது தொடர்பில் காணப்படுகின்ற நிறுவனங்கள் சார்ந்த பிரச்சினைகள் போன்ற 08 பிரச்சினைகள் அல்லது தடைகள் இதில் இனம் காணப்பட்டிருந்தன.

இதனால் இலங்கையின் நீர் மூலங்களையும் அவற்றின் நீரேந்து பிரதேசங்களையும் ஒதுக்கங்களையும் பாதுகாப்பதற்கும் பேணுவதற்குமான தேசிய கொள்கை 2013.02.07 ம் திகதி நடைபெற்ற காணி, காணி அபிவிருத்தி தொடர்பான பாராளுமன்ற ஆலோசனைக்குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழுவினால் தயாரிக்கப்பட்டுஇ 2014.05.20ம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு 2014.12.22 ஆம் திகதிய வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் இக்கொள்கையின் நோக்கு, இலக்கு, கொள்கையின் மூலதத்துவங்கள், நீர் மூலங்களையும் அதனை சார்ந்த பிரதேசங்களையும் இனங்காணல், எல்லைகளை அடையாளமிடல், பாதுகாத்தல் பேணுதலுக்கான கொள்கை, விழிப்புணர்வூட்டல் மற்றும் பங்குபற்றுதலைப் பெற்றுக்கொள்வதுடன் தொடர்புடைய கொள்கை போன்ற இன்னும் சில கொள்கைளும் உள்வாங்கப்பட்டுள்ளன. 

மேலும் இக்கொள்கையின் பிரகாரம் குளங்கள், நதிகள், தாழ்நிலப் பிரதேசங்கள், நீர் வழிந்தோடும் ஒடைகள் என்பவற்றின் அமைவிடத்தையும் தன்மையையும் கருத்திற் கொண்டு அவற்றைப் பேணிப் பாதுகாப்பதற்கு கீழ்க்காணும் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது பொறுத்தமானதென அதில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

அதன் பிரகாரம் பொறுப்பு வகிக்கும் நிறுவனங்களாக, நீர்ப்பாசனத் திணைக்களம், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், இலங்கை மகாவலி அதிகார சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை, கமநல அபிவிருத்தி திணைக்களம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நீர்வளச் சபை, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், பிரதேச செயலாளர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான பிற நிறுவனங்கள் போன்றனவும் மற்றும் அவற்றிக்கான பொறுப்பு வகிக்கும் துறை என்பனவும் மிக தொளிவாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உதாரணமாக: வன பரிபாலனத் திணைக்களம்இ வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்இ மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் பிற தரப்பு நிறுவனங்கள் போன்றவற்றிக்கான பொறுப்பு வகிக்கும் துறையாக – வனஜீவராசிகள் ஒதுக்கங்கள்இ வனவள ஒதுக்கங்கள் மற்றும் சூழல் பாதுகாப்பு பிரதேசங்களுள் அமைந்துள்ள நீர் மூலங்களைப் பேணுதல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான நடவடிக்கைகள்.  

ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்ற நீர் மூலங்களையும் அதன் நீரேந்து பிரதேசங்களையும் மாசடையச் செய்கின்ற பல்வேரு நிகழ்வுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ச்சியாக இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது என்றால் குறித்த பொறுப்பு வாய்ந்த பங்குதார நிறுவனம் தமது கடமையினை தனக்குள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி கட்டுப்பாட்டிற்குள் இன்னும் முழுமையாக கொண்டுவரவில்லை என்ற எண்ணப்பாட்டினை மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது. 

நீர் வளத்தினை நாசம் செய்கின்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றவர்களை அந்த நடவடிக்கையை பொறுத்து அதற்கு பொறுப்பான நிறுவனம் அல்லது நிறுவனங்கள் கூட்டாக இணைந்து இவ்வாறான செயற்பாடுகளை தடுப்பதில் தனது நிறுவனத்தின் வகிபாகம் என்ன என்பதனை தெளிவாக அறிந்து அதனை முறையாக நடைமுறைப்படுத்துவதனுடாக நீர் மூலத்தினையும் அதன் நீர் ஏந்து பகுதியினையும் பாதுகாக்க முடியும். மேலும் இச்செயற்பாடுகள் மாவட்ட மட்டத்தில் அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச மட்டத்தில் பிரதேச செயலாளர் ஆகியோரின் தலைமையில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய முகாமையாளர்களின் பங்கேற்புடன் தொடர்புபட்ட பங்குதாரர்களை ஒருங்கிணைத்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

“பாதுகாப்பான குடிநீரினை பெறுவது ஒவ்வொரு மனிதனதும் மனித உரிமை” என ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது. 

தற்பேதைய நிலையில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 46 வீதம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்பட்டுள்ளது. இந்த அளவினை 2020 ஆம் ஆண்டில் 60 வீதம் ஆக அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கின்றது. 

இந்நிலையில் மக்களுக்கான பாதுகாப்பான குடிநீரினை தொடர்ச்சியாக வழங்குவதற்கு நாட்டிலுள்ள நீர் மூலங்;கள் நீரேந்து பிரதேசங்கள் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி என்ற அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டியதாகும். இதற்கு தொடர்புபட்ட நிறுவனங்கள் அல்லது பங்குதாரர்கள் இவ்விடயத்தில் தமது வகிபாகத்தினை உணர்ந்து வினைத்திறன் மிக்க வகையில் அதற்கான பொறிமுறையினை கைக்கொண்டு இயங்குவதனுடாக வெற்றியை காணமுடியும். இதனால் இலங்கையின் சமூக பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதோடு உயிர் பல்வகைத் தன்மைக்கான சுற்றாடலும் பேணப்படும். 

எம்.எஸ்.எம்.சறூக்
சமூகவியலாளர் 
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை
மட்டக்களப்பு

SHARE

Author: verified_user

0 Comments: