25 Dec 2017

தேவையான வளங்களை வைத்துக் கொண்டு பயன்படுத்த தெரியாமல் இருக்கின்றோம்.

SHARE
மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் தேவையான வளங்கள் இருக்கின்றன. அவற்றினை  பயன்படுத்த தெரியாமல் இருக்கின்றோம். என மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர் சி.குணசேகரம் தெரிவித்தார்.
கொக்கட்டிச்சோலை மக்கள் நல இளைஞர் மன்ற உதவும் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில், கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதில் இடர்படுகின்ற மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (24) கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற போதே இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும், சமூக சேவை உத்தியோகத்தர் உரை நிகழ்த்துகையில்,
முப்பது வருட யுத்தத்தில் இழந்தவைகள் ஏராளம். அவற்றினை மீண்டும் அடைவதற்கான ஆயுதமாக கல்வி இருக்கின்றது. அக்கல்வியின் ஊடாக இழந்தவைகளை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். கல்வியின் ஊடாக சமூகத்தினை முன்னேற்றுவதற்கு அமைப்புக்கள் பலவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கான அறுவடையை இன்னும் பத்து வருடங்களின் பின்பே பெறக்கூடியதாகவிருக்கும்.

மண்முனை தென்மேற்கு பிரதேசத்திலே அனைத்து வளங்களும் இருக்கின்றன. அவற்றினை பயன்படுத்த தெரியாதவர்களாக இருக்கின்றோம். வளங்களை முறையாக பயன்படுத்திவோமாகில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. நுண்கடனுக்கு அடிமையாகவேண்டிய தேவையும் இல்லை. எம்மைச்சூழ சகலவிதமான சத்துணவுகளும் இருக்கின்றன. ஆனால் அவற்றினை நாம் பயன்படுத்திக் கொள்வதில்லை. இதனால் எம்மத்தியில் இன்றும் போசாக்கு குறைவான சிறுவர்கள் பலர் இருந்து கொண்டிருக்கின்றனர்.

இவற்றையெல்லாம் இல்லாமல் செய்ய வேண்டும். ஒரு பிள்ளைக்கு தாயால் கொடுக்ககூடிய அன்பை மற்றர்கள் கொடுத்துவிட முடியாது. அதற்காக தாய் பிள்ளைகளுடன் இருக்க வேண்டும். எமது பகுதியிலே ஒருசில பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிபெண்ணாக செல்லுகின்றனர். இதனால் அவர்களின் பிள்ளைகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளையும் நாம் இல்லாமல் செய்ய வேண்டும் என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: