முனைக்காடு பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு திங்கட் கிழமை (11) மாலை முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் நடைபெற்றது.
2018 ஆம் ஆண்டு புதிய வகுப்புக்களில் கல்வி பயில இருக்கின்ற, கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதில் இடர்படுகின்ற 157மாணவர்களுக்கே இக்கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிந்து கொண்டிருக்கும், நா.முகில்வண்ணன், க.மிதுசனன், ஜெ.சச்சிதானந்தம், சி.தயர்சன், மா.யோகிரிதன், ச.சிவகுமார், ப.லேகேஸ்வரன் ஆகிய முனைக்காடு கிராம உறவுகளின் பங்களிப்பிலே குறித்த உதவிகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், முனைக்காடு விவேகானந்த வித்தியாலய அதிபர் மா.சத்தியநாயகம், வித்தியாலய ஆசிரியை யோ.தங்கத்துரை மற்றும் உதவிபுரிந்தவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு கற்றல் உபகரணப் பொருட்களை வழங்கி வைத்தனர்.
கடந்த ஆண்டும், இவ்வாறு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், கடந்த ஆண்டைவிட அதிக மாணவர்களுக்கு இவ்வுதவி வழங்கி வைப்பட்டதாக ஒழுங்கமைப்பு குழுவினர் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment