தமிழ் தேசியத்திற்கு வாக்களிக்காமல் அற்ப சொற்ப சலுகைகளுக்காக மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களித்தால் அது எம்மினத்திற்காக இன்னுயிர்களைத் தியாகம் செய்த மக்களின் ஆன்ம ஈடேற்றத்திற்குச் செய்யும் துரோகமாக அமைந்து விடும் எனவே உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு திருகோணமலை நகரசபை தேர்தலில் அன்புவழிபுரம் வட்டாரத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் ஊடகவியலாளர் வடமலை ராஜ்குமார் தெரிவித்தார்.
புதன்கிழமை (28) மாலை தனது ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தொடர்ச்சியாக ஆதரித்து வருகின்றனர். இதற்கிடையில் பல கட்சிகள் எமது பிரதேசங்களுக்குள் புகுந்து எம் மினத்தின் வாக்குக்களைச் சூறையாட நினைக்கின்றார்கள். இவ்வாறான விடயங்களுக்கு எமது மக்கள் தலைசாய்க்க மாட்டார்கள்.
உள்ளுராட்சி மன்றம் என்பது ஒரு மனிதனின் கருவறை முதல் கல்லறை வரையான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய ஒரு உள்ளுர் அதிகார கட்டமைப்பு இதில் எமது மக்கள் கடந்த காலங்களில் அடைந்த அபிவிருத்தி திட்டங்கள் சில மட்டுமே இந்த நிலை இனியும் தொடர விட முடியாது. உள்ளுராட்சி சபைகளுக்கு கிடைக்க வேண்டிய முழுமையான வரி வருமானங்கள் அறவிடப்படுவதில்லை இவற்றை முறையாக அறவீடு செய்தாலே எமது மக்களின் அடிப்படை உட்கட்டுமான தேவையை நாம் பூர்த்தி செய்ய முடியும் இவற்றை நடைமுறைப்படுத்த துறைசார்ந்த அறிவுடையோர் நகரசபைக்கு தெரிவாக வேண்டும்.
தமிழரின் தலைநகரமான திருகோணமலை நகரசபையை அன்றும் இன்றும் என்றும் தமிழரே ஆழவேண்டும். இதற்கு அற்ப சலுகைகளும் பொய்பிரச்சாரங்களும் இன்று ஒரு கட்சியில் கட்சியில் நாளை ஒரு கட்சியில் போட்டியிடுபவர்களின் பிரச்சாரங்களை நம்ப திருகோணமலை மக்கள் அப்பாவிகள் அல்ல.
அபிவிருத்தியை பெரும்பான்மை கட்சிகளை சார்ந்தவர்களால் மாத்திரம் செய்யமுடியாது அவற்றை எங்களாலும் செய்யமுடியும். கிராம மட்ட, நகர மட்ட அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு அமையப்பெற்றுள்ள இந்த உள்ளூராட்சி சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும். அதனை வைத்துக் கொண்டு இந்தப் பிரதேசத்தை பாரிய அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment