இரசாயனப் பாவனையும் அதற்கான ஊக்குவிப்பும் மனிதர்களை நோயாளிகளாக மாற்றியிருக்கின்றது என மட்டக்களப்பு விவசாய அமைச்சின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம். சிறாஜுன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு விவசாயத் திணைக்கள சத்துருக் கொண்டான் பயிற்சிப் பாடசாலையில் மட்டக்களப்பு மாவட்ட ரணவிரு குடும்பங்களைச் சேர்ந்த அங்கத்தவர்களுக்கு இயற்கைப் பசளைத் தயாரிப்பு பயிற்சிநெறி செவ்வாயக்கிழமை 28.11.2017 இடம்பெற்றது.
“ரணவிரு சேவா” அதிகார சபையினால் ஏறபாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் இயற்கைப் பசளை உற்பத்தி சம்பந்தமாக விளக்கமளித்து மேலும் உரையாற்றிய அவர், அரசாங்க உதவியாக விவசாயிகளுக்கு மானிய உரம், அதற்கான உதவிப் பணம் இது போன்ற பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.
ஒரு புறம் இவற்றை ஏழை விவசாயிகளை ஊக்குவிப்பதற்கான உதவித் திட்டங்கள் என்று கருதினாலும் மறுபுறத்திலே இவை இந்த நாட்டு விவசாயிகளையும் விவசாய உற்பத்திகளை நுகர்வோரையும் நாட்டு வளங்களையும் நஞ்சாக மாற்றுவதற்கான விளைவுகளும் இருப்பதை அறி;ந்து கொள்ள முடியும்.
நஞ்சற்ற பரம்பரையை உருவாக்குவதற்குப் பதிலாக மறைமுகமாக நஞ்சுண்ணக் கூடிய நோயாளிகளான பரம்பரையை உருவாக்குகின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே புற்றுநோயாளர்களும், சிறுநீரக நோhளிகளும் ஏற்கெனவே அதிகரித்துள்;ள நிலையில் தற்போது இந்த இரசாயனப் பாவனையாலும் நோயாளர்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஆரோக்கியமான வாழ்வுக்கும் ஆரோக்கியமான எதிர்கால சந்ததி உருவாக்கத்திற்கும் இரசாயனங்கள் கலக்காத விவசாய உற்பத்திப் பொருட்களின் நுகர்வு மிக முக்கிமாகும்.
அதனைக் கருத்திற்கொண்டே இவ்வாறான சேதனப் பசளை உருவாக்கத்திற்கு பயிற்சிகளையும் இன்னபிற உதவிகளையும் விவசாய அமைச்சினூடாக வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.
என்வே, மனைப் பொருளாதாரம், தேகாரோக்கியம், நல்வாழ்வு என்பனவற்றிற்கு நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஏழை விவசாயிகளுக்கு காணிகளும், அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக விவசாயத்திற்குத் தேவையான மானிய உதவிகளும் வழங்கப்படுகின்றன. அவற்றை சரியான முறையில் பயன்படுத்தி நாம் நாட்டு வளத்தையும் சுற்றுச் சூழலையும் உணவையும் நஞ்சற்றதாக பேணிப்பாதுகாக்;க வேண்டும்” என்றார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு உதவி மாவட்டச் செயலாளர் ஏ. நவேஸ்வரன், மட்டக்களப்பு பிரதான பொலிஸ் பரிசோதகர் தயால் தீகஹவத்துர, 231வது படைப்பிரிவு அதிகாரி கப்டன் விஜிதகுமார, “ரணவிரு சேவா” அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி ரீ.எச். கீர்திகா ஜயவர்தன உட்பட பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment