இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மண்முனை வடக்குப் பிரதேசக் கிளையின் செயலாளரும் ஊடகவியலாளருமான தேசகீர்த்தி சிவம் பாக்கியநாதன் மட்டக்களப்பு மாநகரசபைத் தேர்தலில் அரசடி வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்றார்.
ஊடகவியலாளரான இவர் மட்டக்களப்பு மாவட்டத் தன்னார்வத் தொண்டு நிறுவனமொன்றின் தலைவராகவும், மட்டக்களப்பு மயிலம்பாவெளி விலேஐ; ஒப் ஹோப் நிறுவனத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளராகவும் கடமை புரிந்து இலவச மருத்துவ முகாம், பார்வைபக் குறைபாடு உள்ளவர்களுக்கான இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கல், வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு கல்வியை ஊக்குவிக்கும் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சமூக நலன்சார் பணிகளில் ஈடுபாடு கொண்டு செயற்பட்டு வருகின்றார்.
இவர் கடந்த 2011 முதல் 2015 வரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாவட்டச் செயலாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment