18 Dec 2017

காணாமல்போன மாணவன் உணவு விடுதியில் வேலை செய்த நிலையில் கண்டு பிடிப்பு

SHARE
ஏறாவூர் பொலிஸ் பிரிவில் காணாமல்போன பாடசாலை மாணவன் வெலிக்கந்தை பொலிஸ் பிரிவு கட்டுவன்வில பிரதேசத்திலுள்ள உணவு விடுதியொன்றில் வேலை செய்து வந்த நிலையில் சனிக்கிழமை மாலை 16.12.2017 கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர், கலைமகள் வித்தியாலய வீதி, ஹிதாயத் நகரைச் சேர்ந்த, அப்துல் கரீம் றியாஸ் அப்துல் ஷாலிஹ் (வயது 15 )  என்ற மாணவன் கடந்த 13ஆம் திகதி இரவிலிருந்து காணாமல் போயிருந்ததாக பெற்றோர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

இதுபற்றி காணாமல் போய் பின்னர் கண்டு பிடிக்கப்பட்ட மாணவனின் தந்தை தெரிவிக்கையில், ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் 09 ஆம் ஆண்டில் கல்வி பயின்றுகொண்டிருக்கும் மாணவன் வருட இறுதித் தவணை விடுமுறை கிடைத்ததும் நண்பர்களின் தூண்டுதலின் பேரில் வீட்டாருக்குத் தெரியாமல் தலைமறைவாகியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததோடு தேடுதலிலும் ஈடுபட்ட வேளையில் இவர் கட்டுவன்வில வில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியில் இருப்பதாகத் தகவல் கிடைத்து அங்கு சென்று அவரை மீட்டெடுத்தோம்” என்றார்.

பாடசாலை விடுமுறை காலங்களில் மாணவர்களை தமது கண்காணிப்பில் இருந்து மறையாத வண்ணம் அவதானத்தில் இருத்திக் கொள்ளுமாறு பொலிஸார் பெற்றோருக்கும் பாதுகாலவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: