இலக்கிய விழா ஆரம்ப நிகழ்வுகள் மங்கள விளக்கேற்றப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்துகளுடன் இலக்கிய விழா நிகழ்வுகள் ஆரம்பமானது.
நடைபெற்ற இலக்கிய விழாவில் மாவட்ட இலக்கிய சிறுவர் பிரிவு, கிராமிய கலாசார மத்திய நிலையம், இஸ்லாமிய கலை இலக்கிய கழகம் ஆகியவற்றின் கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன.
இதேவேளை இலக்கிய படைப்பாளிகள், இலக்கிய ஆர்வாளர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், மாவட்ட மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற மாவட்ட இலக்கிய போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த இலக்கிய விழா நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என். மணிவண்ணன், கிழக்கு பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ், பிரதேச செயலாளர்கள், கலைஞர்கள், இலக்கிய வாதிகள், கலாசார உத்தியோகத்தர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் கலை, இலக்கிய படைப்பாளிகள் கலந்துகொண்டனர்.
விசேடமாக 2017ஆம் ஆண்டுக்கான கலைச்செம்மல் விருதுகள் வல்லிபுரம் மீனாம்பிகை, முருகேசு தம்பிப்பிள்ளை, கணபதி செல்லத்துரை, அலி முஹம்மது முஸ்தபா, இராசமாணிக்கம் எதிர்மன்னசிங்கம் ஆகியோருக்கு அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரால் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
அத்துடன், மாவட்ட கலாசார அதிகார சபையினால் நடத்தப்பட்ட குறும் திரைப்படப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பாடுமீன் விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment