மட்டக்களப்பு ஏறாவூர்- கோயில் புரம் பிரதேசத்தில் வாழ்ந்துவந்த 85 வயதுடைய மூதாட்டி ஒருவர் திங்கட்கிழமை (11.12.2017) காலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சின்னத்தம்பி தவமணி என்பவரே மரணமடைந்தவரென அடையாளங் காணப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இவரது இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கண்பார்வையையும் இழந்து தனிமையாக குடிசையில் வாழ்ந்து வந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இச்சம்பவம் குறித்து ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
0 Comments:
Post a Comment