18 Dec 2017

மர்மமாக இறந்த முதியவரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் வேண்டுகோள்

SHARE
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரியபோரதீவு கிராமத்தில் புழக்கமில்லாத சந்தைப் பகுதியில் கடந்த 14ஆம் திகதி மர்மமாக இறந்த கிடந்த நிலையில் மீட்கப்பட்ட வயோதிபரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இவரது சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்த நிலையில் காணப்பட்டவர் சுமார் வயது மதிக்கத்தக்க கந்தசாமி ராஜகோபால் என அடையாளம் காணப்பட்டள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் இவரது மர்ம மரணத்துக்கான காரணத்தைக் கண்டறியும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை அநாதரவான நிலையில் வாழ்ந்து வந்த இவரைப் பற்றிய மேலதிக தகவல்களைப் பொலிஸார் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மர்மமாக மரணித்தவர் தமது இளமைக் காலத்தில் பெரியபோரதீவுப் பிரதேசத்திற்கு வந்த சேர்ந்து அங்கேயே தனித்த நிலையில் கடந்த 40 வருடங்களாக சீவித்து வந்ததாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

பொரியபோரதீவுப் பகுதி பொதுச் சந்தையையே அவர் தனது வசிப்பிடமாக மாற்றிக் கொண்டதாகவும் கிராம மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இறந்துபோன இந்த முதியவரைப் பற்றியதகவல் தெரிந்தால்
அதுபற்றி உடனடியாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் 0652250022 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு பொதுமக்களைக் கெட்டக் கொள்வதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் எம்.ஏ.கே.எம். தாஹிர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: