எமது கிராமத்திலுள்ள அனைத்து மக்களும் படித்தவர்கள் எனவே அவர்களுக்கு யார் சேவை செய்வார்கள், செய்யமாட்டார்கள் என்பதனை பகுத்தறிந்து கொள்ளும் அறிவு அவர்களிடம் தராளமாகவே உள்ளது.
என உள்ளுராட்சி தேர்தலில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு களுதாவளை தெற்கு வட்டாரம் சார்பாக போட்டியிடும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் ஞா.யோகநாதன் தெரிவித்தார்.
உள்ளுராட்சி தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து புதன் கிழமை (27) தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவிததார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…..
எமது கிராமமான களுதாவளையை பொறுத்தளவில் அனைத்து மக்களும் படித்தவர்கள் எனவே அவர்களுக்கு யார் சேவை செய்வார்கள் யார் சேவை செய்யமாட்டார்கள் என்பதனை பகுத்தறிந்து கொள்ளும் அறிவு அவர்களிடம் தராளமாகவே உள்ளது. இதன் அடிப்படையில் நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ளேன். வேட்பாளர்களில் சேவையாற்றக் கூடியவர்களை அடையாளங்கண்டு எமது கிராம மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
ஊழல் மோசடிகள் அற்ற சேவையை ஆற்றக் கூடியவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறானவர்களை தெரிவு செய்வதன் ஊடாகவே எமது பிரதேசம் வளரச்சியடையும். இத்தேர்தலைப் பொறுத்தளவில் பல கட்சிகள் எமது கிராமத்தைச் சார்ந்தவர்களை எமது கிராமத்திர் களம் இறக்கி உள்ளனர். எனவே நீண்டகாலமாக அனைவரையும் அனைத்து மக்களும் அறிந்து வைத்துள்ளனர் அவர்கள் சரியாக இனங்கண்டு தங்களது பிரதேசத்தின் நன்மைகருதி உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பார்கள்.
அதற்கு மேலாக எமது மக்கள் தமிழத் தேசியத்தின்பால் நிற்கின்றனர் அவர்கள் இத்தேர்தல் ஊடாக தேசியத்தை நிலைநாட்ட வேண்டிய தேவையுள்ளது இது காலத்தின் தேவையும்கூட எனவே எமது மக்கள் இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெற வைப்பது காலத்தின் தேவையாகும் என அவர் இதன் போது தெரிவித்தார்;.
0 Comments:
Post a Comment