எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு பட்டிருப்பு தொகுதி மக்கள் வாக்குப்பலத்தை பலமாக பிரயோகித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரங்களை பலப்படுத்துவதன் பட்டிருப்புத் தொகுதி மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியும். என பட்டிருப்பு தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் இளையதம்பி தவஞானசூரியம் தெரிவித்தார்.
பட்டிருப்பு தொகுதியில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை, போரதீவுப்ற்று பிரதேச சபை, மண்முனை தென்மேற்கு பிரதேச சபை, ஆகிய சபைகளுக்கான தேர்தலுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் 61 பேர் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இது சம்பந்தமாக ஞாயிற்றுக் கிழமை (17) ஊடகங்களுக்கு கருத்து தரிவிக்கும்போதே அவர் இவவ்hறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிகையில்…
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் கை சின்னத்தில் போட்டியிடவுள்ளோம். மூன்று சபைகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கைப்பற்றுவதுடன் எங்களின் அபிவிருத்தி அபிலாஷைகளையும், தேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். பட்டிருப்பு தொகுதி மக்களின் தேவைகள், இளைஞர் யுவதிகளின் வேலை வாய்ப்புக்கள், மக்களின் அடிப்படை வசதிகளுடன் கூடிய தேவைகள் என்பனவற்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு தெரியப்படுத்தி பட்டிருப்பு மக்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொடுப்பேன்.
குறிப்பாக கல்வியுடன் கூடிய அபிவிருத்தி விடயங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றையும், வறுமைப்பட்ட மக்களின் தேவைகள், வாழ்வாதர வசதிகள், என்பனவற்றை ஜனாதிபதி அவர்களுடன் கதைத்து செய்வதில் பின்னிற்க மாட்டேன். விஷேடமாக ஜனாதிபதி அவர்களை பட்டிருப்பு தொகுதிக்கு அழைத்து வந்து மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன். எனவே எதிர்வரும் உள்ளுராட்சி சபைத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கைச்சின்னத்திற்கு வாக்களித்து ஜனாதிபதி அவர்களின் கரங்களை பலப்படுத்துவதன் மூலம் பொதுமக்களின் அபிலாஷைகளை கைப்பற்ற முடியும். வாக்களித்து ஏமாந்த சமூகமாக இல்லாமல் வாக்குரிமையை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு வழங்கி ஒவ்வொரு குடும்பத்தையும் மாற்றமுள்ள சமூகமாக மாற்றுவோம் எனத்தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment