29 Dec 2017

டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு 7 வயது சிறுமி மரணம்.

SHARE
மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் டெங்குக் காய்ச்சல் காரணமாக 7 வயதுச் சிறுமி புதன்கிழமை 27.12.2017 மரணமடைந்துள்ளாக சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல். நஸ{ர்தீன் தெரிவித்தார்.
காத்தான்குடி பதுறியா வித்தியாலயத்தில் தரம் 2 இல் கற்கும் முஹம்மத் இஸ்மாயில் பஸாத் ஐனி (வயது 7) என்ற சிறுமியே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி மரணித்துள்ளார்.

இச்சிறுமி கடந்த 3 தினங்களாக டெங்குக் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

சமீப சில நாட்களுக்குள் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இடம்பெற்றுள்ள முதலாவது டெங்கு மரணம் இதுவாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: