பல்கலைக்கழக மாணவிகள் தங்கியிருந்த விடுதிக்குள் கூரை பிரித்து உள்ளிறங்கி லப்டொப், நவீன செல்பேசிகள், பணம். தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைதான 13 வயதுச் சிறுவனுக்கு சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை ஏறாவூர் பொலிஸார், ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை 01.11.2017 ஆஜர் செய்தபோது சிறுவனை ஒரு இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதித்த மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்விAdditional Magistrate and Additional District Judge Muhammath Ismail
Muhammath Rizvi வழக்கை அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கொம்மாதுறை உமாமில் வீதியை அண்டிய பகுதியில், கிழக்குப் பல்கலைக்கழக மாணவிகள் தங்கியிருந்த வீடொன்றிலேயே இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்து கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவிகளிற் சிலர் அங்கு வீடொன்றை வாடகைக்குப் பெற்று தங்கியிருந்த வேளையில் மாணவிகள் தங்கியுள்ள வீட்டுச் சுற்றாடலில் வசிக்கும் குறித்த சந்தேக நபரான சிறுவன் அந்த மாணவிகள் வீட்டில் இல்லாத தருணம் பார்த்து வீட்டுக் கூரையைப் பிரித்து உள்ளிறங்கி அம்மாணவிகளின் உடமைகளான லப்டொப், பென்ட்ரைவ், நவீன ரக தொடுகை செல்பேசிகள், தங்க நகைகள், பணம் என்பனவற்றைத் திருடிச் சென்றான் என்ற முறைப்பாட்டுக்கமைய சிறுவன் கைது செய்யப்பட்டிருந்தான்.
இச்சம்பவம் பற்றி விசாரணையிலீடுபட்ட பொலிஸார் சந்தேக நபரான சிறுவனைக் கைது செய்ததோடு சிறுவன் அளித்த தகவலின் பேரில் திருடப்பட்ட 1 லப்டொப், 3 செல்பேசிகள், பணம், பென்ட்ரைவ் உட்பட இன்னும் சில பொருட்களையும் கொம்மாதுறைப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் இருந்து உடனடியாகவே மீட்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment