சம்பளத்துக்கு வேலை செய்வதைவிட சமுதாயத்திற்கு வேலை செய்வது சிறப்பானதாகும். சம்பளத்தை பொதுமக்கள் திருப்திகரமாக சொல்லமாட்டார்கள். ஆனால் நாம் செய்யும் வேலையை திருப்திகரமாகவும்,மனச்சாட்சிக்கு நேர்மையாகவும் செய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் என்.மணிவண்ணன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதார தொழிலாளர்களுக்கு "முறையான திண்மக்கழிவகற்றல்" சம்பதமான தெளிவூட்டல் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (19) மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் தலைமைதாங்கி உரையாற்றும் போதே மேலுள்ளவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில் … அரச கடமையை அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும்.எங்களுக்கு ஒப்படைக்கும் வேலைகளை சரியாக செய்யவேண்டும்.எங்கேயோ யாருக்கோ பதில் சொல்லவேண்டும்.உங்கள் வேலைகளை அர்ப்பணிப்புடன் செய்யும் போது கடவுள் எங்களை ஆசீர்வாதிப்பார். எமது வேலையை சிறப்பாக செய்தாலும் குறை காண்பதே மனித இயல்பாகும். அதற்கு நாங்கள் ஒருபோதும் பயப்படவேண்டாம். உங்களின் ஒத்துழைப்புக்கள் மட்டக்களப்பு மாநகரசபைக்கு மிகவும் முக்கியமானது.
இன்று எமது மாநகரசபைக்கு முக்கியமான பிரச்சனை திருப்பெருந்துறை குப்பை பிரச்சனையாகும். இந்த திருப்பெருந்துறை குப்பை பிரச்சனைக்கு மிகவிரைவில் நீதிமன்ற தீர்வு வழங்கப்படவுள்ளது. மனிதன் உயிர்வாழும் வரை குப்பைப்பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும். கழிவுகள் தவிக்கப்படாத ஒன்றாகத்தான் இருக்கும்.
கழிவுகளை பாடசாலைகளிலும்,வீடுகளிலும்,அரச திணைக்களங்களிலும் சரியாக முகாமை செய்தால் குப்பைப்பிரச்சனை தோன்றாது. வீடுவீடாக முறையாக சேகரிக்கப்படவேண்டும். வீடுகளில் மூன்று வகையாக தரம்பிரித்து தங்களின் குப்பைகளை பொதுமக்கள் வைத்திருக்க வேண்டும்.குறிப்பாக உக்கக்கூடியது, உக்க முடியாதது, இலத்திரணியல் கழிவுகள் என்று தரம்பிரித்து வைக்க வேண்டும்.
எதிர்வரும் 28 ம் திகதிக்கு பின்னர் லயன்கழகம்,மாணவர்கள்,சாரணர்களை கொண்டு வீடு வீடாக திண்மக்கழிவகற்றல் சம்பந்தமாக போதியளவு தெளிவூட்டவுள்ளோம். அதன் பின்னர் பொதுமக்கள் முறையான திண்மக்கழிவகற்றலை செய்யவேண்டும். வெற்றுக்காணிகளிலோ, பொது இடங்களிலோ, வடிகாண்களிலோ,வீதிகளிலோ குப்பைகளையும்,கழிவுகளையும் வீசக்கூடாது. அவ்வாறு வீசுபவர்களை சரியாக இனங்காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து தண்டப்பணம் அறவிடப்படும் எனத்தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment