மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வெற்றிகரமாக வெற்றிகரமாக இடம்பெற்று வரும் பாரிசவாத தாக்குதலுக்கான சிகிச்சைகள் பற்றிய விழிப்பூட்டலும் செயற்பாடுளின் பின்னூட்டலும் பற்றிய கருத்தரங்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை 02.11.2017 இடம்பெற்றது.
அங்கு நிகழ்வில் உரையாற்றிய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விஷேட நரம்பியல் நிபுணர் வைத்தியர் ரீ. திவாகரன், வுhசழஅடிழடலளளை வுசநயவஅநவெ எனப்படுகின்ற இரத்தக் கட்டியைக் கரைக்கும் சிகிச்சை முறைமூலம் சிகிச்சை அளிக்கும் முறை இலங்கையில் ஒரு சில அரசாங்க வைத்தியசாலைகளிலேயே காணப்படுகின்றது.
அந்த சிகிச்சை முறை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடங்கப்பட்டள்ளது முழுக் கிழக்கு மாகாண மக்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாகும்.
எனவே பாரிச வாத நோயினால் தாக்கப்படுவோர் கூடிய பட்சம் 3 மணித்தியாலங்களுக்குள்ளாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை அணுகி தங்களை குணப்படுத்திக் கொள்ள முடியும்.
கடந்த ஒரு வருட காலத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை அணுகிய பாரிசவாத தாக்குதலுக்கு உள்ளானோரில் 23 பேர் வெற்றிகரமான சிகிச்சை மூலம் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்கள்.
அதேவேளை சுமார் 100 பேருக்கு மேல் பாரிசவாத தாக்குதலுக்கான வைத்திய ஆலோசனைகளையும் முறைப்படியான சிகிச்சைகளையும் பெற்றுள்ளார்கள் என்றார்.
சர்வதேச பாரிசவாத நோய் தினத்தை அனுஷ்டிக்கும் இடம்பெற்ற இந்நிகழ்வில் முகமாக தேசிய பாரிசவாத சங்கத்தின் தலைவர் நரம்;பியல் வைத்திய நிபுணர் எம்.ரி.எம். றிப்ஸி, செயலாளர் நரம்பியல் வைத்திய நிபுணர் காமினி பத்திரண, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பி.ஜி.பி. டானியல், நரம்பியல் வைத்திய நிபுணர் ரி. திவாகரன் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், தாதியர்கள் சமூக அமைப்புக்களின் பிரிதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment