6 Nov 2017

யேசு கிருஸ்துவின் பிறப்பையொட்டி ஒழுங்கு செய்திருந்த ” ஒளி விழா

SHARE
பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிக்குடி கிறிஸ்தவஆசிரியர்களும்   மாணவர்களும்  யேசு கிருஸ்துவின் பிறப்பையொட்டி ஒழுங்குசெய்திருந்த
 ஒளி விழா ” வியாழக்கிழமை(02) பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் இடம்பெற்றது.

மெதடிஸ்த சபையின் கல்லாறு முகாமைக்குழு சேகரம் அருட்  ஜே.ஜேஞானரூபன் பிரதம அதியாகவும் கோட்டக்கல்வி பணிப்பாளர் வீ.திரவியராஜா  பாடசாலை   அபிவிருத்தி சபை செயலாளர் கே.யோகநாதன் ஓய்வு பெற்ற ஆசிரியை கே.ஜெயந்தி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் பிரதி அதிபர்களான  ரீ.ஜனேந்திரராஜா என்.நாகேந்திரன்  எம்.சுவேந்திரராஜா ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

ஜெபம் வரவேற்பு நடனம் வரவேற்புரை வேத வாசிப்பு கிறிஸ்மஸ் செய்தி  கரோல் கீதம் என்பன இடம்பெற்றன.சகல இனத்தைச் சேர்ந்த  ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை  கல்லூரி வரலாற்று நிகழ்வாகும்




SHARE

Author: verified_user

0 Comments: