புதிய அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு தாண்டவன்வெளி பேர்டினட் மண்டபத்தில் சனிக்கிழமை (25) மாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா, யாழ் மாவட்ட நாடாளுமன்ற மாவட்ட உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.துரைரெட்ணசிங்கம், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், பொதுமக்கள், கட்சி ஆதரவாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது புதிய அரசியல் அமைப்பின் விளக்கங்கள் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயராளர் கி.துரைராசசிங்கம், சீ.யோகேஸ்வர்ன், எம்.ஏ.சுமந்திரன், மாவை.சேனாதிராஜா, மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன், ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
0 Comments:
Post a Comment