ஒரு தமிழ் கட்சியின் ஆரம்ப கர்த்தாவாக இருந்த ஜி.ஜி.பொன்னம்பம் அவர்கள் பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்தவர். அதிகாரப் பரவலாக்கத்தின் பின் வந்த ஒரு தீர்வு அதைக் கூட எதிர்த்த தமிழர்களும் இருக்கின்றார்கள்.சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வு வந்தபோதே எதிர்த்தவர்கள். இந்த இடைக்கால அறிக்கை தொடர்பாக எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு நாட்கள் செயலமர்வு இடம்பெற்றது. அதில் நாங்கள் பல விடயங்களைத் தெளிவாக அறிந்து கொண்டோம். இந்த இடைக்கால அறிக்கை பல விடயங்களைத் தாங்கி வருகின்றது.
குறிப்பாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட ஜனாதிபதி முறைமை இந்த அறிக்கையிலே காட்டப்பட்டுள்ளது. தேர்தல் முறைமை, ஆளுநரின் அதிகாரம் குறைக்கபட்டடு மாகாண மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுகின்ற தண்மை காணப்படுகின்றது. அனைத்து மதங்களுக்கும் மதச் சுதந்திரம் பூரணமாக வழங்கப்பட வேண்டும் என்பதும் இதில் குறிப்பிடப்பட்டுளளது. பெண்களின் பிரதிநிதத்துவம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இடைக்கால அறிக்கை என்பது முழுமையான அரசியல் யாப்பு அல்ல. அதனையே இப்போது தூக்கிக் கொண்டு பலர் நாடகமாடுகின்றார்கள். இதில் இன்னும் பல விடயங்கள் வர இருக்கின்றன. இதில் சில மாற்றங்களும் வரலாம். இவையெல்லாம் சேர்ந்து புதிய யாப்பு ஒன்று வரும். அவ்வாறு வராது என்று சிலர் சொல்லுகின்றார்கள். ஆனால் நாங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் புதிய அரசியல் யாப்பு வரவேண்டும் என்று ஏனெனில் இந்த அரசியல் யாப்பில் தான் தமிழர்களின் பங்களிப்பு கூடுதலாக இடம்பெறுகின்றது. இதனை நாங்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
சமஸ்டி என்றால் சிங்களவர்கள் எதிர்க்கின்றார்கள் ஒற்றையாட்சி என்றால் தமிழர்கள் எதிர்க்கின்றார்கள் இந்த நிலையிலே இரண்டுக்கும் பொருந்தக் கூடிய வகையில் இரண்டு பகுதியினரின் எண்ணப்பாட்டில் மாற்றம் வரக் கூடிய வகையில் ஒருமித்த நாடு என்ற சொற்பதத்தோடு இந்த இடைக்கால அறிக்கை மற்றும் அரசியல் யாப்பு உருவாகி வருகின்றது. என்று தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment