17 Nov 2017

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தின் நிருவாகத்தில் பாரிய மாற்றம், பிரதி அதிபர் எம்.சுவேந்திரராசாவுக்கு பட்டிருப்பு தொகுதி கல்வி சமூகம் பாராட்டு

SHARE

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில்(களுவாஞ்சிகுடி) பிரதியதிபராக நியமிக்கப்பட்டடிருக்கும் எம்.சுவேந்திரராசா அவர்களின் நிர்வாச் செயற்பாடு மிகவும் போற்றுதற்குரியது. இதனை அவர் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என பட்டிருப்பு தொகுதி வாழ் கல்வி சமூகம் வேண்டுகோள் விடுக்கின்றது.
பட்டிருப்பு தொகுதியில் சுமார் 54 கிராமங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்றுவருகின்ற பாடசாலையின் செயற்பாடுகளில் ஒரு தசாப்பதமாக தொய்வு நிலை ஏற்பட்டிருந்தது. இதனால்   பெற்றோர்கள், நலன்விரும்பிகள், பழைய மாணவர்கள்,அதிகாரிகள், புலம்பெயர்ந்து வாழும் பழைய மாணவர்கள் என பலரும் பலதரப்பட்ட விமர்சனங்களை முன்வைத்து வந்திருந்தனர் இது யாவரும் அறிந்ததே.இவ்வாறான நிலை காரணமாக பலமாணவர்கள் வேறுபாடசாலைகளை நோக்கி படையெடுத்திருந்தனர் ஏன் அப்பாடசாலையில் கல்வி கற்கும் ஆசிரியர்களின் பிள்ளைகள் கூட வேறுபாடசாலைக்கு சென்றிருந்தனர் 

குறித்த பிரதியதிபர் கார்மேல் பற்றிமா கல்லூரியில் பதில் அதிபராக கடமையாற்றி வந்த நிலையில்  இப்பாடசாலைக்கு பிரதியதிபராக நியமிக்கபட்டிருந்தார். அவர் கடமையேற்று மூன்று மாதங்கள் கடந்த நிலையில் பாடசாலையில் அனைத்து வழிகளிலும் பாடசாலையில் திடிர்மாற்றம்; ஏற்பட்டுள்ளதை எமது சமூகம் உணர்ந்துள்ளது.  அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் அனைவரையும் அரவணைத்து பாடசாலையின் நிருவாகத்தினை செவ்வெண்ணே ஒழங்கமைந்துள்ளார். அனைத்து ஆசிரியர்களும் இவரின் செயற்பாடுகளுக்கு ஒத்தழைப்பு வழக்கி பாடசாலையின் வரலாற்றினை மாற்றியமைக்க திடசங்கர்ப்பம் பூண்டுள்ளனர். 
இதனால் எமது தொகுதி மாணவர்களின் கல்வியில் பல மாற்றங்கள் ஏற்பட காத்திருக்கின்றது. இந்த நிலமையை உருவாக்கிய அத்த மகானை நாங்கள் பாராட்டாமல் இருக்கமுடியாது. இது தொடர்ச்சியாக இடம்பெறவேண்டும் அன்பார்ந்த எங்களது உயிரிலும் மேலான ஆசிரயர்களே அவருடன் இணைந்த எமது சமூத்தில் மாற்றத்தினை ஏற்படுத்த எடுத்திருக்கம் சவாலுக்கு நாங்களும் தலைவணங்கி பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

எனவே அன்பார்ந்த கல்வி சமூகமே அவரின் சேவைக்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். “இது எங்கள் கலைக்கோவில் இதன் வளரச்சியே எமது சமூகத்தின் எழுச்சியாகும்” எனவே இனியாவது இப்பாடசாலை பழைய நிலைக்கு மறுமலர்ச்சியடைந்து சரித்திரம் படைக்கும் பாடசாலையாக மாறட்டும். பட்டிருப்பு தொகுதி வாழ் கல்வி சமூகம் தெரிவிக்கின்றது. 
SHARE

Author: verified_user

0 Comments: