மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் மாணவன் மாகாண மட்ட மீலாத்போட்டியில் முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தெரிவித்தார்.
மாகாண மட்ட மீலாத்போட்டியானது கடந்த 5.10.2017 திகதியன்று திருகோணமலையில் நடைபெற்றது. இந்த போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் தரம் பதினொன்றில்(தரம்-11)கல்வி பயிலும் ஏ.எம்.மைஸான் யும்னி எனும் மாணவன் தமிழ்மொழி மூலம் கவிதைப்போட்டியில் பங்குபற்றி முதலாம் இடத்தை பெற்று, தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மீலாத் போட்டியில் மாகாணமட்டப் போட்டியில் பங்குபற்றி முதலாம் இடத்தை பெற்று பாடசாலைக்கும்,பெற்றோருக்கும் புகழை ஈட்டித்தந்த ஏ.எம்.எம்.யும்னியை மெதடிஸ்த மத்திய கல்லூரியின் இஸ்லாம் பாடஆசிரியை எவ்.எம்.எம்.நஸார் அவர்கள்தான் ஊக்கமும், உற்சாகமும் வழங்கி போட்டியில் வெற்றி பெறுவதற்கு காரணமாக விருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தேசியமட்டப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவனை அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் அவர்கள் பாராட்டி கௌரவித்ததோடு, தேசிய மட்டப்போட்டியிலும் முதலாம் இடத்தைப் பெறவேண்டுமென குறித்த மாணவனுக்கு ஆலோசனையையும்,வழிகாட்டல்களையும் வழங்கினார்.
0 Comments:
Post a Comment