மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பந்தமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரான 18 வயது இளைஞன் திருட்டு இடம்பெற்று 4 மாதங்களின் பின்னர் செவ்வாய்க்கிழமை மாலை 31.10.2017 கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 28.06.2017 அன்று கருக்கல் நேரத் தொழுகைக்காக ஏறாவூர் பொலிஸ் பிரிவு ஏறாவூர் நகரத்தில் உள்ள ஜாமிஉல் அக்பர் பள்ளிவாசலில் தொழுகையை முடிப்பதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து விட்டுச் சென்றவரின் மோட்டார் சைக்கிள் 10 நிமிட இடைவெளியில் திருடப்பட்டிருந்தது.
தனது பல்ஸர் ரக பிபிஎச் (BBH) 7753 எனும் கறுப்பு நிற மோட்டார் சைக்கிளே மிக சூட்சுமமாகத் திருடப்பட்டிருந்ததாக ஏறாவூர் பிரதான வீதியைச் சேர்ந்த அச்சி முஹம்மது முஹம்மது றாபி (வயது 30) என்பவர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த முறைப்பாட்டுக்கமைவாக வீதிகளிலுள்ள காணொளிக் கமெராக்களின் உதவி கொண்டும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலும் தொடர் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் ஓட்டமாவடியைச் சேர்ந்த இளைஞனைக் கைது செய்து விசாரித்து வருவதோடு சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment