மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் சர்வதேச சிறுவர்தின நிகழ்வுகள் அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் திங்கட் கிழமை (02) காட்மண்ட் மண்டபத்தில் நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் இன்பராசா நிரோஜன் இச்சிறுவர்தின நிகழ்வில் பங்குபற்றி சிறுவர்களின் உரிமை,கடமை,பாதுகாப்பு விடயங்களை தெளிவான விளக்கத்துடன் விளக்கமளித்தார்.
இதன்போது அதிபர் ஜே.ஆர்.விமல்ராஜ் மாணவச் சிறுவர்களை அரவணைத்து தனது சிறுவர்தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மெதடிஸ்த மத்திய கல்லூரியின் சிறுவர்கள் அணைவரும் இத்தருணத்தை சாதகமாக்கிக் கொண்டு தனது பெற்றோர்களுக்கு வழங்கப்படும் உயரிய மரியாதை போன்று முழுமையான மரியாதையை(கனம் பண்ணுதல்) அதிபருக்கு செலுத்தினார்கள்.இந்த சிறுவர்தினத்தில் கலந்து கொண்ட சிறுவர்களை சேர்ந்த ஆயிரம் பேருக்கு அதிபர்,பிரதியதிபர்கள்,உபஅதிபர்கள் இனிப்பு பண்டங்கள் வழங்கி மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.
0 Comments:
Post a Comment