கூகிள் தேடல் கருவியானது இந்த நவீன உலகத்த்தில் நம்அனைவராலும் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த தேடல் கருவிக்கு மேலதிகமாக கூகிள்
நிறுவனத்தினால்பல்வேறுபட்ட சேவைகள் வழங்கப்பட்டுவந்த போதிலும்இவற்றுள்
பிரதானமாக பயணிகளாலும் சாரதிகளாலும்பெரும்பாலும் பாவிக்கப்பட்டு வரும்
சேவையே கூகிள்வரைபடம் ஆகும்.
ஆயினும் கூகிள் வரைபடத்தில் காணப்படும் அனைத்துத்தகவல்களும் கூகிள்
நிறுவனத்தினால் உள்ளிடப்பட்டவை அல்ல. இவற்றில் பெரும்பாலானவை தன்னார்வமுள்ள கூகிள்லோக்கல் கயிட்ஸ் எனப்படும் இந்த குளுவினரால்
அவர்களது ஓய்வு நேரத்தினால் உள்ளிடப்பட்டவையாகும். எவ்வாறாயினும் இந்த லோக்கல் கயிட்ஸ் குழுவினர் கூகிள்நிறுவனத்தினால் பணியமர்த்தப்பட்டவர்கள் அல்ல. தத்தமதுபிரதேசங்களில் உள்ள கூகிள் வரைபடங்களை
பயன் படுத்தும் நோக்குடன் உலகளாவிய ரீதியில் சேவைசெய்யும்
குழுவினர் ஆகும்.
இவ்வாறு உலகெங்கும் சேவை புரியும் லோக்கல் கயிட்ஸ்குழுவினரில் சிறப்பாக
சேவை செய்யும் ஒரு சிலர் கூகிள்நிறுவனத்தினரால் பாராட்டப்படும் உச்சிமானாடு
ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மானிலத்தில் ஆண்டுக்கொருமுறை
நடத்தப்பட்டு வருகிறது.
இம்முறை 2017 ஆம் ஆண்டுக்கான இந்த உச்சிமானாட்டில்
இலங்கையை பிரதி நிதித்துவப்படுத்தும் முகமாகமட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இளங்கோவன்
துஷ்யந்தா என்பவரும், கொழும்பைச் சேர்ந்த அனுராதபியதாச என்பவரும்
கலந்துகொண்டமை வியக்கத்தக்கவிடயமாகும்.
இவர்களில் மட்டுமண்ணைப்
பிறப்பிடமாகக் கொண்ட இளங்கோவன் துஷ்யந்தா என்பவர் இத்தோடு இரண்டாவது முறையாக இந்த உச்சிமானாட்டில்
கலந்து கொள்கிறார். அது மட்டுமல்லாது இந்த உச்சிமானாட்டில்
விஷேட விருது பெற்ற ஆறு பேரில் மட்டக்களப்பு லோக்கல் கயிட்ஸ் குழுவினரைச்
சேர்ந்த இவரது பெயரும் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கவிடயமாகும். கடந்த வருடம்
இடம்பெற்ற முதலாவது கூகிள் உச்சிமானாட்டில் கலந்துகொண்ட முதலாவது இலங்கையர்
மற்றும் முதலாவது தமிழர் என்ற பெருமையும் இவரையே சாரும்.
இவ்வாறான தன்னார்வம் கொண்ட இளைஞர்கள் மட்டுமானகரத்திலிருந்து உருவாவது
பெருமைதரக்கூடிய விடையமாகும்.
0 Comments:
Post a Comment