3 Oct 2017

தோல்வகைகளையும் பயன்படுத்தி சப்பாத்துக்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டம்.

SHARE
யுஸ்.எயிட் நிறுவனத்தின் உதவிமூலம் யுத்தம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிப்புற்று தொழில் வாய்ப்பற்றிருக்கும் 100 இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்துள்ளதாக மட்டக்களப்பு கிராங்குளத்தில் அமைந்துள்ள சப்பாத்து தொழிற்சாலையின் தொழில்நுட்ப முகாமையாளர் ஜனத் நிசாந்த தெரிவிக்கின்றார்.
யுஎஸ்.எயிட் நிறுவனத்தின் உதவியில் லியாகே இன்டஸ்ற்ரீற் பிரைவற் லிமிட்டெட் நிறுவனத்தின் மூலம் மட்டக்களப்பு கிராங்குளத்தில் அமையப் பெற்றுள்ள சப்பாத்து தொழிற்சாலையின் முன்னேற்றங்கள் தொடர்பில் அறிவதற்காக யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பணிக்குழுத் தலைவர் கலாநிதி அன்ரூவ் சிஸன் (Dr. Andrew Sisson, USAID-Mission Director for SriLanka and Maldives)   உள்ளிட்ட குழுவினர் திங்கட் கிழமை மாலை (02) வருகை தந்திருந்தனர். இதன்போது விளக்கமளிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

லியாகே இன்டஸ்ற்ரீற் பிரைவற் லிமிட்டெட் நிறுவனத்தின் மூலம் யுஎஸ்.எயிட் அமைப்பின் பூரண உதவிமூலம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 100 இளைஞர் யுவதிகளுக்கு இந்த தொழிற்சாலையில் தொழில் வாய்ப்பினை வழங்கி அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவியுள்ளோம். அகக்கூடியதாக 35000 ரூபா வரைக்கும் இங்கு தொழில் புரியும் தொழிலாளர்கள் வேதனம் பெறுகின்றார்கள்.

இந்த இளைஞர் யுவதிகள் அனைவரும் நன்கு பயிற்றப்பட்டுள்ளார்கள். இவர்கள் மூலம் ஒரு நாளைக்கு 750 பாடசாலை மாணவர்களின் சப்பாத்துக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது லெதரைப் பயன்படுத்தித்தான் இந்த சப்பாத்துக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, இவற்றை இலங்கை நாட்டுக்குள்தான் வினியோகிக்கப்பட்டு வருகின்றன, எதிர்காலத்தில் தோல்வகைகளையும் பயன்படுத்தி சப்பாத்துக்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளோம். என அவர் தெரிவித்தார்.
















SHARE

Author: verified_user

0 Comments: