ஒரு பிள்ளை வாசிக்கப் பழகிக்கொள்ளும்போது பாடசாலையில் இலகுவாக கற்றலை மேற்கொள்ள அது உதவுகின்றது. இந்நிலையில் பிள்ளைகளை பெற்றோர்கள் நூலகத்திற்கு அழைத்து வரவேண்டும், ஆனால் அது நடைபெறுவதில்லை.
என களுதாவளை பொது நூலகத்தின் திருமதி.நூலகர் ஹரீசா சமீம் தெரிவித்துள்ளார். களுதாவளை பொது நூலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர் ஆக்கங்களை வினைத்திறன் செய்யும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை மேற்படி பொது நூலகத்தில் இடம்பெற்றது. இதன்போது களுதாவளை விபுலாநந்தா பாலர் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு உருவங்களுக்கு வர்ணம் தீட்டும் நிழ்வு இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இல்லகு குறிப்பிட்டார் அவர் மேலும் தெரிவிக்கையில்…
நூலகத்திற்கு ஒரு பிள்ளை தினமும் வந்து வாசிப்பில் ஈடுபடுமாக இருந்தால் அப்பிள்ளை எதிர்காலத்தில் அனைத்து விடையங்களையும் கற்றுத் தேர்ந்தவர்களாகவும், திறமையான மாணவராகவும் திகழும். மாறாக பிள்ளைகளை சிறுவர் பூங்கா, கடற்கரை, போன்ற பல இடங்களுக்கு பெற்றோர்கள் அழைத்துச் செல்கின்றார்கள், ஆனால் நூலகத்திற்கு அழைத்து வருவதற்குத் தயங்குகின்றார்கள். இவற்றில் பெற்றோர்கள் கவனதிற் கொள்ள வேண்டும்.
சிறுவர்களை நூலகத்தில் வைத்து வாசிப்பில் ஈடுபடுத்தும்போது சொற்களை தெழிவாகவும், அழகாகவும், பிழையின்றியும் உச்சரிக்க ஆரம்பத்திலிருந்தே கற்றுக் கொள்கின்றார்கள். நூலகத்தில் கற்றுத் தேறுகின்ற சிறுவர்கள் எதிர்காலத்தில் பல்துறைக் கலைஞர்களாகவும், அறிவிப்பாளர்களாகவும், கல்விமான்களாகவும், தங்களைத் தாங்களே சுயமதிப்பீடு செய்கின்றவர்களாகவும் திகழ்வார்கள்.
தற்காலத்தில் பெற்றோர்கள் வீடுகளில் அலுமாரிகள் நிர்மபி வழியும் அளவிற்கு ஆடைகளையும், விளையாட்டுப் பொருட்களையும்தான் வாங்கி குவித்திருப்பார்கள். ஆனால் வீட்டில் புத்தகங்களை வாங்கி வைக்கவோ, புத்தத்திற்கென ஓர் அலுமாரியை ஒதுக்குவதென்பதோ குறைவாகத்தான் இருக்கின்றன. எனவே ஆடைகள் கொள்வனவு செய்வதற்கு 5000 தொடக்கம் 10000 வரைக்கும் செலவு செய்கின்றார்கள், இவற்றைச் சிந்தித்து, தங்களது பிள்ளைகளுக்கு மாதம் ஓர் புத்தகத்தையாவது வாங்கிக் கொடுக்க வேண்டும்.
பிள்ளைகள் கதைகள் மூலம்தான் விசிப்பினை உள்ளீர்க்கின்றார்கள், எனவே பெற்றோர்கள் அனைவரும் நூலகத்தில் அங்கத்தவர்களாக இணைந்து, பிள்ளைகளுக்கு வாசிப்பினை ஊக்கப்படுத்த வேண்டும். ஏனெனில் வாசிப்பினால் முன்னேறி உலக தலைவர்களாக மாறிய பலர் இருக்கின்றார்கள். எனவே வாசிப்பின் மூலம் புதியதோர் உலகைக் கட்டியெழுப்புதவற்கு அனைவரும் முன்வரவேண்டும் என அவர் தெரிவித்தார்.
வாசகர் வட்டத் தலைவர் சீவரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உத்தியோகஸ்த்தர்கள், நூலக உதவியாளர்கள், விபுலாநந்தா முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், வாசகர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். இதில் கலந்து கொண்ட பாலர் பாடசாலை மாணவர்வர்கள் உருவங்களுக்கு வர்ணம் தீட்டியதோடு மாணவர்களுக்கு நூலகத்தினால் புத்தகம் உள்ளடங்கிய பரிசுப் பொதிகழும் வழங்கப்பட்டு, வாசிப்பை நேசிப்போம் எனும் துண்டுப் பிரசுரமும் வெளியீட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment