17 Oct 2017

முற்றத்திற்குப் பரப்புவதற்கு வாங்கிய மண்ணுக்குள் பெரிய மோட்டார் குண்டு கண்டு பிடிப்பு

SHARE
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயங்கேணிக் கிராம வீட்டு வாசலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 15.10.2017 துருப்பிடித்த பெரிய மோட்டார் குண்டொன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன் வீட்டுரிமையாளர் தனது வீட்டு முற்றத்திற்குப் பரப்புவதற்காக ஒரு லோட் மண் வாங்கியுள்ளார். டிப்பர் மூலம் கொண்டுவரப்பட்டு கொட்டப்பட்ட மண்ணை வாசலில் பரப்பிக் கொண்டிருந்தபோது கடினமானதொரு இரும்பு போன்ற பொருள் மண்ணுக்குள் மறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

அதனை மண்வெட்டியால் ஓரிரு தடவைகள் புரட்டி, தட்டிப் பார்த்தபோது அது வெடி குண்டாக இருக்கலாம்  என அறியமுடிந்துள்ளது.

இதுபற்றி ஏறாவூர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் பாதுகாப்பு மற்றும் குண்டை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.




SHARE

Author: verified_user

0 Comments: