12 Oct 2017

காட்டு யானை தாக்கி விவசாயி மரணம்

SHARE
மட்டக்களப்பு வன இலாகாப் பிரிவிலுள்ள ஈரலக்குளம் - பொத்தானைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 08.10.2017 காட்டு யானை தாக்கியதில் அப்பகுதி பண்ணையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பகுதியிலுள்ள விழா மரங்களிலிருந்து விழும் விழாம்பழங்களைச் சேகரிப்பதற்காக இவர் சென்றபொழுது ஏற்கெனவே அங்கு விழாம்பழங்களை உண்பதற்காக வந்திருந்த காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இவர் உள்ளானதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் ஆரோக்கியா வீதி, துறைநீலாவணைக்  கிராமத்தைச் சேர்ந்த பொன்னையா ரவிச்சந்திரன் (வயது 52) என்பவரே கொல்லப்பட்டவராகும்.
வெகு சிரமத்திற்கு மத்தியில் காட்டு யானைகளின் நடமாட்டத்தினூடே அவரது சடலம் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டதாக ஏறாவூர்ப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் நவரூபரஞ்சினி முகுந்தன் தெரிவித்தார்.

இச்சம்பவம்பற்றி கரடியனாறு பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: