மட்டக்களப்பு, புதிய காத்தான்குடியில் போலி முகநூல் பக்கத்தால் எழுந்த சர்ச்சை தொடர்பான விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 பேருக்கும் சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த நபர்களுக்களிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸாரால் 8 பேர் கைது செய்யப்பட்டு 24ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கபபட்டிருந்தனர்.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை 24.10.2017 இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சந்தேக நபர்கள் 8 பேரும் தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் வழக்கு விசாரணை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 09 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
காத்தான்குடிப் அப்பகுதியில் இடம்பெற்ற திருமணத்தில் மாப்பிள்ளையொருவர் சீதனம் பெற்றதாகக் கூறி, அவரை விமர்சித்து போலியான பேஸ்புக் பக்கமொன்று உலாவியமையே, இந்த மோதலுக்குக் காரணமென, விசாரணைகளின்போது தெரியவந்தது.
0 Comments:
Post a Comment