பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள அதிகஸ்ட்டப் பிரதேசத்திலும், எல்லைப்புறத்திலும் அமைந்துள்ளதான மட்.பட்.மண்டூர் 40 ஆம் கிராமத்தில் அமைந்துள்ள அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வியாழக்கிழமை (19) பாரிய சிரமதானம் ஒன்று இடம்பெற்றது.
அக்கிராம பொதுமக்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் பொது அமைப்புக்கள், என பலரும் ஒன்றிணைந்து டெங்கு நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் முகமாக பாடசாலைச் சூழல் பாரிய சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டதாக மேற்படி பாடசாலையின் அதிபர் க.சந்திரகுமார் தெரிவித்தார்.
இதன்மூலம் நுளம்புகள் பெருகும் பாடசாலைச் சூழலை அண்டியுள்ள சிறிய பற்றைகள், புற்கள் போன்றன வெட்டி அகற்றப்பட்டு பழுதடைந்து கிடந்த படசாலை சுற்று வெலியும் சீரமைக்கப்பட்டமாக அதிபர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment