5 Oct 2017

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு - மட்டு மாவட்டத்தில் டிலக்சிகா, சஜில் ஆகியோர் முதலிடம் அட்சரன் 4 ஆம் இடம்.

SHARE
தற்போது வெளியாகியுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்.வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலைன் டிலக்சிக்கா வனராஜன் என்ற மாணவி 191 புள்ளிகளையும், மட்.ஓட்டமாவடி சரீபலி வித்தியாலயத்தைச் சேர்ந்த நையீம் முகமட் சஜில் என்ற மாணவனும்  191 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் இருவரும் முதலித்தைப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையிலிருந்து 56 மாணவிகள் இந்த ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளதாக அதிபர் இராஜகுமாரி கனகசிங்கம் தெரிவித்தார்.
இதேவேளை மட்.சிவானந்தா தேசியபாடசாலை மாணவன் ஏகலைவன் அட்சரன் 188 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 4ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.



SHARE

Author: verified_user

0 Comments: