இம்முறை நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் போரதீவுப் பற்றுக் கோட்டத்திலிருந்து 26 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக போரதீவுப் பற்றுக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இவ்விடையம் குறித்து செவ்வாய்க் கிழமை (17) தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அந்த வகையில்; இக்கோட்டத்திலுள்ள பழுகாமம் விபுலானந்தா வித்தியாலயத்திலிருந்து 10 மாணவர்களும், மண்டூர் இராமகிருஷ்ண வித்தியாலயத்திலிருந்து 4 மாணவர்களும், முனைத்தீவு சக்தி மாகா வித்தியாலயத்திலிருந்து 3 மாணவர்களும், தம்பலவத்தை காணேஷா வித்தியாலயத்தரிலிருந்து 2 மாணவர்களும், மண்டூர் - 14 சக்தி மகாவித்தியாலயத்திலிருந்து 2 மாணவர்களும், மண்டூர் - 13 விக்கினேஸ்வரா வித்தியாலயத்திலிருந்து 1 மாணவரும், திக்கோடை கணேசா வித்தியாலயத்திலிருந்து 1 மாணவரும், கோவில் போரதீவு விவேகானந்தா வித்தியாலயத்திலிருந்து 1 மாணவரும், ஸ்ரீ வெள்ளிமலைப் பிள்ளையார் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலிருந்து 1 மாணவரும், திருக்கொன்றை முன்மாரி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலிருந்து 1 மாணவரும் சித்தி பெற்றுள்ளனர்.
இதில் ஸ்ரீ வெள்ளிமலைப் பிள்ளையார் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வரலாற்றில் இம்முறை முதற் தடவையாக சித்தி பெற்றுள்ளதுடன் இக்கோட்டத்தில் சித்தி பெற்ற 26 மாணவர்களுள் அதிகூய புள்ளியாக 186 புள்ளிகளை , திக்கோடை கணேசா வித்தியாலய மாணவர் பெற்றுள்ளதாகவும், போரதீவுப் பற்றுக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment