களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை இவ்வருடம் 12 வருதுகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாக மேற்படி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் செயற்பாட்டு முன்நேற்ஙகள் தொடர்பில் வியாழக் கிழமை (19) தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடைய் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்….
கிழக்குமாகாண சுகாதாரத்திணைக்களத்தினால் அண்மையில் நடாத்தப்பட்ட விருது வழங்கும் நிகழ்வின்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு 12 விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அந்த வகையில் சிறந்த தாதியர் முதலாம் இடம் ஒருவருக்கும். தாதிய பரிபாலகர் இரண்டாமிடம் ஒருவரும், கதிரியக்கவியலாளர் முதலாமிடம் ஒருவரும், இருதய ரேகை பதிவாளர் முதலாமிடம் ஒருவரும், இயன் மருத்திவியலாளர் முதலாமிடம் ஒருவரும், அற்றண்டன் முதலாமிடம் ஒருவரும், சிற்றூழியர் இரண்டாமிடம் ஒருவர், தையலாளர் இரண்டாமிடம் ஒருவர், மற்றும் ஜெய்க்கா விருதுகளை 3 பேரும் பெற்றுக் கொண்டதுடன் விசேட விருது ஒன்று களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணனுக்கும் கிடைடைக்கப் பெற்றுள்ளன.
கடந்த காலங்களில் மிகவும் பாரிய பௌதீக மற்றும் மனித வளங்களைக் அற்ற நிலையில் காணப்பட்ட இவ்வைத்தியசாலை ஜெய்க்கா திட்டத்தின் கீழ் 514 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டு கடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் எமது வைத்தியசாலையில் கடமைபுரியும் அனைத்து வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களும் மிகவும் விருப்புடனும், திறமையுடனும் அற்பணிப்புடனும், கடமைபுரிந்து வருகின்றார்கள். எனவே எமது வைத்தியசாலை இவ்வருடம் 12 விருதுகளைத் தனதாக்கிக் கொணடதற்கு காரணகர்த்தாவாக இருந்த அனைவருக்கும் நன்றிகூறுகின்றேன் என களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment