மட்டக்களப்பு மவாட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட இளைஞர் விவசாயத் திட்டக் கிராமத்தில் காட்டுயானைகள் தரித்து நிற்கும் பற்றைக் காடுகள் புதன் கிழமை (27) அழிதத்து துப்பரவு செய்யப்பட்டன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசாவிடம் இளைஞர் விவசாயத் திட்டக் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் விடுத்த வேண்டுகோளிற்கு இணங்க, மேற்படி மாகாண சபை உறுப்பினர் போரதீவுப்பற்று பிரதேச சபையுடன் தொடர்பு கொண்டு குறித்த பற்றைக் காடுகள் பெக்கோ இயந்திரத்தின் அழித்து மூலம் துப்பரவு செய்யப்பட்டன.
சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள காடுகள் இதன்போது துப்பரவு செய்யப்படுகின்றன. இதுவரைகாலமும், எதுவித கவனிப்பாரற்றுக் கிடந்த இவ்வேலைத்திட்டத்தை மாகாணசபை உறுப்பினரின் முயற்சியினால் இச்செயற்பாடு முன்நெடுக்கப்படுவதாகவும், இதனை மேற்கொண்டு தந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்கண்டு நடராசா, போரதீவுப்பற்று பிரதேச சபை ஆகியோருக்கு தாம் நன்றி தெரிவிப்பதாக இளைஞர் விவசாயத் திட்டக் கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் இ.நிமலன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment