கிழக்குபல்கலைக்கழக பேரவையால் பகிடிவதை மற்றும் ஒழக்கயீன நடவடிக்கைகளுக்காக விசாரணை நடார்த்தப்பட்டு, வழங்கப்பட்ட வகுப்புத்தடைகளை நீக்குவதே மாணவர்களின் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது என்று கிழக்கு பல்கலைக்கழக் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கிழக்குபல்கலைக்கழகத்தின் தற்போதையசூழ்நிலை தொடர்பாக கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியசங்கத்தினால் வெள்ளிக்கிழமை 25.08.2017 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் வெளியிட்டள்ள அறிக்கையின் முழு வடிவம்,
கிழக்குபல்கலைக்கழகத்தில் ஒரு சிறு பகுதி மாணவர்களால் 08.08.2017 தொடக்கம் கிழக்குப் பல்கலைக்கழக மூதவை கட்டிடத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து நிர்வாக செயற்பாடுகளையும் கல்விநடவடிக்கைகளையும் சீர்குலைத்து மேற்கொள்ளப்பட்டுவரும் பிரச்சனையால் கிழக்குபல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் சங்கம் தங்களது ஆழ்ந்த கவலையை இத்தால் வெளிப்படுத்துகிறது. இது ஒருசிறுபகுதி மாணவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஒழுக்கமற்ற நடவடிக்கையாகும்.
கிழக்குபல்கலைக்கழக பேரவையால் பகிடிவதை மற்றும் ஒழக்கயீன நடவடிக்கைகளுக்காக விசாரணை நடார்த்தப்பட்டுஇ வழங்கப்பட்ட வகுப்புத்தடைகளை நீக்குவதே மாணவர்களின் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது.
அத்துடன் இரண்டாம் வருட மாணவர்களுக்கு விடுதி வசதியினை பல்கலைக்கழகவளாகத்தினுள்ளே வழங்கக் கோருவது மாணவர்களின் அடுத்த நோக்கமாக உள்ளது. பொதுவாக இலங்கையிலுள்ள எந்தவொரு பல்கலைக்கழகங்களிலும் இரண்டாம் வருட மாணவர்களுக்கு விடுதி வசதி வழங்கப்படுவதில்லை. இருப்பினும் சில பல்கலைகழகங்களில் இரண்டாம் வருட மாணவர்களுக்கு விடுதி வசதி வழங்கபடுகிறது. இது மாணவர்களின் அனுமதியின் போது தெரிவிக்கப்பட்டு பெற்றோர் மற்றும் மாணவர்கள் எழுத்து மூல உடன்படிக்கையில் கைச்சாத்திட்டும் உள்ளனர்.
எனினும் இட நெருக்கடிக்கு மத்தியில் கடந்தகாலங்களில் இரண்டாம் வருட மாணவர்களுக்கும் விடுதி வசதிகளை கிழக்குபல்கலைக்கழகம் வழங்கியிருந்தது. அதனால் ஏற்பட்ட சுகாதாரஇ சுற்றாடல் சீர்கேடுகளால் பல்கலைக்கழகம் மூடப்பட்டு கல்வி நடவடிக்கைகள் சீர்குலைந்திருந்தன.
கிழக்குபல்கலைக்கழக வளாகத்தினுள் போதிய விடுதிவசதிகள் இல்லாமையால் தகுந்த வெளியிடங்களில் இரண்டாம் வருட மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகளை கிழக்கு பல்கலைக்கழகம் செய்துள்ள போதிலும் மாணவர்கள் அதனைப்புறக்கணித்துவருகின்றனர்.
இந்த நிலையில் சுமூகமான முறையில் தீர்வுக்கு வருவதற்காக கிழக்குபல்கலைக்கழக ஆசிரியர் சங்கமாகிய நாங்கள் மாணவர்களை மூதவை கட்டிடத்தை விட்டு வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்தும் மாணவர்கள் அதனை செவிசாய்க்காமல் உள்ளனர்.
மாணவர்களின் இந்த நடவடிக்கைகளால் அனைத்து ஊழியர்களும் தங்களது கடமைகளை மேற்கொள்ள முடியாமலிருப்பது ஊழியர்களது அடிப்படை உரிமையை மறுக்கும் செயலாகும். அத்துடன் மாணவர்களின் இச்செயற்பாடானது செப்டெம்பர் மாதம் திட்டமிடப்பட்டிருக்கும் கிழக்குபல்கலைக்கழகத்தின் பொதுபட்டமளிப்பு விழாவின் ஏற்பாட்டு நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது மிகவும் வருந்தக் கூடிய செயலாகும்.
அத்துடன் இவ்வாறான செயற்பாடுகள் குறிப்பாக முதலாம் வருட மாணவர்களை பலாத்காரமாக பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் செயற்பாடானது பகுடிவதைக்கு எதிரான சட்டத்தையும் மீறுவதாக அமைகின்றது.
இவ்வாறான சிறுதொகை மாணவர்களால் மேற்கொள்ளப்படும் ஒழுக்கமற்ற நடவடிக்கைகளையும் மாணவர்களின் நியாயமற்ற கோறிக்கைகளையும் கிழக்குபல்கலைக்கழக ஆசிரியசங்கமானது வன்மையாக கண்டிப்பதுடன் நிர்வாக கட்டிடத்தையும் விட்டு உடனடியாக மாணவர்களை வெளியேறுமாறு பணிப்பதோடு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மாணவர்களின் பெற்றோர் தமது பிள்ளைகளை தங்கள் வீட்டிற்கு உடனடியாக அழைத்துச் செல்லுமாறும் கேட்டுக்கொள்கின்றது.
0 Comments:
Post a Comment