21 Sept 2017

அமெரிக்க தூதரகத்தினால் இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு மூலோபாய வர்த்தக நடைமுறைப்படுத்தல் பயிற்சி.

SHARE
அமெரிக்க தூதரகத்தினால் இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு மூலோபாய வர்த்தக நடைமுறைப்படுத்தல் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வியாழக்கிழமை (21) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்களப்பட்டுள்ளதாவது.
ஐக்கிய அமெரிக்க ஏற்றுமதிக் கட்டுப்பாடு மற்றும் எல்லைப் பாதுகாப்புத் திணைக்கள (நுஓடீளு) நிகழ்ச்சித்திட்டமும ;, உலக சுங்க ஒன்றியமும் (றுஊழு) இணைந்து, செப்டெம்பர் 12 முதல் செப்டெம்பர் 15, 2017 வரை 34 இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு, மூலோபாய வர்த்தக கட்டுப்பாட்டு நடைமுறை தொடர்பான பயிற்சிகளை வழங்கினர். 

தமது நாட்டு எல்லைக்குள் நுழையும், நாட்டின் பாதுகாப்பிற்கும் பொதுமக்கள் பாதுகாப்பிற்கும் பங்கம் விளைவிக்கக் கூடிய ஆபத்தாகக் கருதப்படக்கூடிய சரக்குகளை சுங்க நிர்வாகிகள் மதிப்பீடு செய்யக் கூடிய வழிமுறைகள் இந்த பயிற்சிப்பட்டறையில் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது மேம்பட்ட முறையில், ஆபத்தானதாகக் கருதப்படும் சரக்குகளை நோக்காய்வு மூலம் இனங்கண்டு, மேலதிக நேரடிச் சோதனைகள் மேற்கொள்வது தொடர்பான அறிவு, செயற்றிறன், மற்றும் முறைகள் பற்றிய பயிற்சிகள் சுங்க அதிகாரிகளுக்கு வழங ;கப்பட்டது. அதி-ஆபத்துள்ள பரிமாற்றப் பண்டங்களை வினைத்திறனாகக் கண்டறிதல் மற்றும் சரக்குப் பொருட்களைக் குறித்து நோக்கும் அறிவு மற்றும் செயற்றிறனையும் கற்றுக் கொண்டார்கள். 

இந்நிகழ்வில், மூலோபாய வர்த்தக கட்டுப்பாடு (ளுவுஊநு)இ ளுவுஊநு ல் சுங்க அதிகாரிகளின் பங்களிப்பு, ளுவுஊநு நடைமுகைளை ஸ்தாபித்தல் மற்றும்  வெற்றியளிப்பதற்கான சாதகநிலையை ஏற்படுத்தல், ளுவுஊநு ஐ நடைமுறைப்படுத்தும் தொழில்நுட்ப அறிவு, பேரழிவு ஆயுதங்கள் தொடர்பாக ளுவுஊநு  நடைமுறை, சுங்க இணக்க பொறிமுறையில் மூலோபாய வர்த்தக  கட்டுப்பாடு மீறல்கள் ஏற்படுத்தக்கூடிய முக்கியத்துவம் மற்றும் சவால்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. தமது எல்லைக்குள் உள்நுழையும், கடந்து செல்லும், வெளிச்செல்லும் சரக்குகளை, சுங்க நிறுவனங்கள் தமது வரையறுக்கப்பட்ட வளங்களுடன் நோக்காய்வு செய்வதற்கான வழிவகைகளைத் தேடுகின்றனர். 

நுஓடீளு ஆனது பெரழிவு ஆயுதங்கள் பெருகுதல் மற்றும் வழங்கற் பொறிமுறை, மற்றும் மரபு ரீதியான ஆயுதங்கள் மூலம் பிராந்திய சமாதானம் மற்றும் ஸ்திரதன்மைக்கு ஆபத்து ஏற்படுத்துவதை தடுப்பதற்கு முயன்று வருகின்றது. பன்முகப்படுத்தப்பட்ட பெருகும்தகவற்ற மூலோபாய வர்த்தக கட்டுப்பாட்டு உதவி நிகழ்ச்சித் திட்டம், இணக்க அனுமதி மற்றும் சட்டஃஒழுங்கமைப்பு தொழில்நுட்ப உதவி, அத்துடன் கடற் பாதுகாப்பு, எல்லைப்பாதுகாப்பு, சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு உபகரணங்கள் வழங்கல் மற்றும் பயிற்சியளித்தல் ஆகியவற்றை நுஓடீளு நிகழ்ச்சித்திட்டமானது கொண்டுள்ளது. 

SHARE

Author: verified_user

0 Comments: